உ.பி: இந்துவாக மாறிய முஸ்லீம் மதத்தின் முக்கிய தலைவர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஜ்வீ, இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2021, 08:40 PM IST
உ.பி: இந்துவாக மாறிய முஸ்லீம் மதத்தின் முக்கிய தலைவர்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதால், ஒவ்வொரு நிகழ்வும் மாநில அளவிலான கவனத்தைப் பெற்று வருகிறது. தற்போது, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் திடீரென முஸ்லீம் மதத்தில் இருந்து விலகி இந்துவாக மாறியிருப்பது தேர்தல் நேரத்தில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது.

ALSO READ | தொடர்கதையாகும் நாகா மக்கள் மீதான தாக்குதல்கள்: நாகா மக்கள் இயக்கம்

ஷியா பிரிவு முஸ்லீம் வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருந்தவர் வசீம் ரிஜ்வீ. அவருக்கு இப்பதவி கிடைத்ததில் இருந்தே, இந்து மதத்துக்கு ஆதரவாகவும், இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராகவும் பொதுவெளியில் கருத்துகளை பேசி வந்ததார். இதனால், இஸ்லாமிய மக்களிடையே ரிஜ்வி மீது கடும் அதிருப்தி இருந்தது. குறிப்பாக அயோத்தி பிரச்சனையில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும், பிரதமர் மோடியை ஆதரித்தும் பேசி வந்தார். அவரின் தொடர் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் அதிருப்தியான ஷன்னி பிரிவு முஸ்லீம்கள், ரிஜ்வீக்கு ’பத்வா’ (முஸ்லீம் அல்லாதவர்) அளித்தனர். அதேபோல், ஷியா பிரிவு முஸ்லீம்களும் அவரை வெறுக்கத் தொடங்கினர். 

இந்நிலையில், இன்று காசியாபாத் சென்ற அவர், முறைப்படி இந்துவாக மாறினார். மகாகால் தாஸ்னா கோயில் மடத்தில் நரசிம்மானந்கிரி மஹராஜ் அவருக்கு மதம்மாறும் சடங்குகளைச் செய்தார். இந்துவாக மாறிய அவருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு ‘ஜிஜேந்தர்சிங் நாராயண்சிங் தியாகி’ எனவும் பெயர் சூட்டப்பட்டது.

ALSO READ | கணவன் தைத்த ஜாக்கெட் பிடிக்காததால் மனைவி தற்கொலை!

இந்த நிகழ்வுக்குப்பிறகு பேசிய அவர், இந்துக்களுக்கு ஆதரவாக பேசியதால் முஸ்லீம்களிடம் தனக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவித்தார்.  இப்போது முழுமையான இந்துவாக மாறிவிட்டதாக கூறிய அவர், இனிமேல், நாடு முழுவதும் இந்து மதத்தை வளர்க்க பாடுபடுவேன் எனக் கூறினார். இந்துகளுக்கு எதிராக செயல்படும் முஸ்லீம்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிப்பேன் என தெரிவித்த நாராயணன்சிங், சில நாட்களுக்கு முன்பு தான் இறந்தால் இந்து முறைப்படி உடலை புதைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு திருகுர்ஆனின் 26 பக்கங்களை நீக்க வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவருக்கு நீதிபதிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருந்தனர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News