மூன்று முறை தலாக் கூறுவதையும், ஒரே சிவில் சட்டத்தையும் முஸ்லீம் வாரியம் ஒன்றாக பார்க்க வேண்டாம் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: மூன்று முறை தலாக் கூறும் முறையையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக இணைத்து பார்க்கக்கூடாது. இதில் அரசியல் செய்யக்கூடாது. மூன்று முறை தலாக் கூறப்படுவது பொது சிவில் சட்டத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் முக்கியமானது, பாலின நீதி, பெண்களின் மாண்பு, பாகுபாடு பார்க்க்கூடாதது ஆகியவை ஆகும்.
இந்த விவகாரத்தில் அரசு எதையும் திணிக்க விரும்பவில்லை. பொது மக்களின் கருத்தை மட்டுமே கேட்க விரும்புகிறது. மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவதை முடிவுக்கு கொண்டு வரவே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். பொது மக்கள் கருத்து கேட்பதை புறக்கணிப்பதாக முஸ்லிம் வாரியம் சொல்வதன் மூலம் ஜனநாயகத்திற்கு தடை செய்கிறது. இது தான் சர்வாதிகாரம் சிலர் தலாக் முறை குறித்தும், பொது சிவில் சட்டம் குறித்தும் குழப்பி கொள்கின்றனர். அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள் எனக்கூறினார்.