ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், 26 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணமானது. இவர்கள் இருவரும் வாழ்வாதரத்திற்காக செங்கல் சூளையில் கூலி வேலை பார்ப்பதற்காக ஒடிசாவில் இருந்து ராஜஸ்தான் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் சேர்ந்த ஒரு சில நாட்களில், ரூ.1.80 லட்சத்திற்கு தனது மனைவியை 55 வயது நபருக்கு விற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த சிறுவன் தனக்கு தேவையான பணத்தை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மீதம் இருந்த பணத்திற்கு ஒரு ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, சிறிது நாட்கள் கழித்து தனது கிராமத்திற்கு மீண்டும் திரும்பி சென்றுள்ளார். கிராமத்திற்கு திரும்ப அவன் தனியாக வந்ததை பார்த்த மனைவியின் உறவினர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அந்த சிறுவன் தனது மனைவி தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டதாக உறவினர்களிடமும், கிராமத்தினரிடமும் தெரிவித்தான்.
ALSO READ | பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லையா? 2021-ல் 46% அதிகரிப்பு; உ.பி முதலிடம்
சிறுவன் கூறியதை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண்ணின் உறவினர்கள், காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த சிறுவனை தீவிரமாக விசாரித்துள்ளனர். விசாரணையில் அவரின் செல்போன் அழைப்புகளை சரிபார்த்தனர். அதன்பேரில் அந்த சிறுவன் மனைவி விட்டுவிட்டு சென்றதாக குறிப்பிடும் தகவலில் உண்மையில்லை என்பதை உணர்ந்தனர். இதையடுத்து, போலீசார் அவர்கள் பாணியில் விசாரிக்க அவர் மனைவியை விற்றதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஒடிசா போலீஸ் குழுவினர் அந்த பெண்ணை கண்டுபிடிக்க ராஜஸ்தான் சென்றனர். அங்கு பலங்கிர் என்ற கிராமத்தில் அந்த பெண் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை மீட்க போலீசாயர்கள் அக்கிரமாத்திற்கு சென்ற போது, அந்த கிராமத்தினர் பெண்ணை அழைத்துச்செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் அந்த பெண்ணை பணம் கொடுத்து வாங்கியுள்ளோம் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அனுப்ப மறுத்தனர். ஆனால் இறுதியில் மிகுந்த சிரமப்பட்டு அவரை அங்கிருந்து போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அந்த 17 வயது சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ALSO READ | தந்தை - சகோதரனை பிணைக் கைதியாக்கி மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR