பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என எழுதப்படாமல், பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜி2ஒ விருந்தினர்களுக்கு பிரம்மாண்ட விருந்து கொடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் X தளத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தினை #BHAvsPAK என குறிப்பிட்ட பதிவிட்டு இருந்ததை மேற்கோள் காட்டி வீரேந்திர சேவாக்குக்கு இந்த பெயர் மாற்றம் முன்பே தெரிந்துள்ளது என X பயனர் பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்வ்வீரேந்திர சேவாக், ‘நாட்டின் பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் பாரதத்தை சேர்ந்தவர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். நமக்கான உண்மையான பெயர் 'பாரத்' . அதனை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது’ என பதிவிட்டுள்ளார்.
I have always believed a name should be one which instills pride in us.
We are Bhartiyas ,India is a name given by the British & it has been long overdue to get our original name ‘Bharat’ back officially. I urge the @BCCI @JayShah to ensure that this World Cup our players have… https://t.co/R4Tbi9AQgA— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
மேலும் படிக்க | G-20 உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் சீனா... ஏமாற்றம் அடைந்த ஜோ பைடன்!
உலகில் வளர்ந்த நாடுகளும், வல்லராக உருவாகும் எண்ணம் கொண்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி-20 அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா என பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து உள்ளதால் சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்பாக ஜி-20 கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதால், இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | BRICS அமைப்பில் பாகிஸ்தானிற்கு நோ என்ட்ரி... கைவிட்ட சீனா, ரஷ்யா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ