அக்டோபர் இரண்டுக்குள் ஒன்றை பயன்பாடு பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை!!
நாடு முழுவதும் உள்ள 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், மக்களவை உறுப்பினர் ஹேமா மாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி; "ஓம் மற்றும் மாடு என்ற சொற்களை சிலர் கேட்கும்போது, நாடு 16 ஆம் நூற்றாண்டுக்கு திரும்பிவிட்டது என்று கத்துகிறார்கள். அத்தகையவர்கள் தேசத்தை அழிக்கிறார்கள்" என அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு செல்வம் நீண்ட காலமாக இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இன்று முழு உலகமும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அவர்கள் ஒரு முன்மாதிரியைத் தேடுகிறார்கள். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணாவில் இந்தியா எப்போதும் ஒரு முன்மாதிரியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும், தேசத்தின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது. விலங்குகளை காப்பது நமது கலாசாரத்தில் ஒரு அங்கம். இதற்கு கடவுள் கிருஷ்ணர் முன்மாதிரியாக உளளார். விலங்குகளுக்கு ஏற்படும் நோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளோம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை நாம் கைவிட வேண்டும். ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் வீடு, அலுவலகம் மற்றும் பணி செய்யும் இடங்களில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்கான இயக்கத்தில், சுய உதவி குழுக்கள், தனி நபர்கள், சிவில் அமைப்புகள் இணைய வேண்டும். மக்கள், கடைகளுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் மாற்று பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து சாலை அமைக்க வேண்டும்.உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த நமது மனநிலையை மாற்ற வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை வர்த்தகர்கள் குறைக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். மஹாத்மாவின் கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கால்நடை வளர்ப்பு, விவசாயிகளுக்கு வருமானத்தை கொடுக்கும், அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடைகள் பாதுகாப்பில், அரசு தீவிரமாக உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை தடுக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் துவக்கப்படும். சிலருக்கு 'ஓம்' அல்லது 'பசு' என்ற வார்த்தை சொல்வது பிடிக்காது. அவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. நாடு பின்னோக்கி செல்கிறோமா என கேட்கின்றனர். பசுக்களை பாதுகாப்பது தவறு அல்ல" என பிரதமர் மோடி தெரிவித்தார்.