ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரை ஒன்று காருக்குள் பாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குதிரை வண்டிக்காரர் ஒருவர் சாலை ஓராமாக தனது குதிரையை கட்டி விட்டு அதற்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகாமாக இருந்ததால் அந்த குதிரை கயிற்றை அற்றுவிட்டு சாலையில் ஓடத்தொடங்கியது.
சாலையில் ஓடிய அந்த குதிரை முதலில் பைக் ஒன்றின் மீது மோதியது. பின்னர் அந்த சாலையில் வந்த காரின் முன்பக்க வழியாக பாய்ந்தது. இதனால் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது.
இந்த சம்வத்தில் குதிரையும், அந்த காரை ஓட்டிவந்தவரும் சிக்கிக்கொண்டனர். பின்னர் அந்த குதிரையும் ஓட்டுநரையும் மக்கள் மீட்டனர்.
#WATCH Horse broke into a car's windshield after collision between the two. Horse and car driver suffered injuries #Jaipur (04 June) pic.twitter.com/YxN2CBFw4s
— ANI (@ANI_news) June 5, 2017