இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் COVID-19 தொற்றுக்கு மத்தியில், 2021 ஆம் ஆண்டில் நாட்டில் 400 முதல் 500 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்திய மற்றும் சர்வதேச அளவில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளின் சூழ்நிலை குறித்து விவாதிக்க, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Dr. Harsh Vardhan) செவ்வாய்க்கிழமை டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
"தடுப்பு மருந்து கிடைக்கக்கூடும் தோராயமான கால அளவைக் கருத்தில் கொண்டு, இந்த தடுப்பு மருந்தை அளிப்பதில் எந்த பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான செயல் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இது ஒரு விஞ்ஞான அணுகுமுறையின் மூலம் கண்காணிக்கப்படும்" என்று ஹர்ஷ் வர்தன் ANI இடம் கூறினார்.
"இதற்காக, அமெரிக்காவின் நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்டுள்ள செயலுத்திகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக டிஜிட்டல் தளங்களும் உருவாக்கப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.
தடுப்பு மருந்து நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு, டாக்டர் வி.கே. பால் தலைமையில், நாட்டில் தடுப்பு மருந்து விநியோகத்தை எவ்வாறு வெளியிடுவது என்பது குறித்து திட்டமிடுவதற்கான உத்திகளைத் உருவாக்குவதற்கு மத்திய அரசால் பணிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட குழுவில் AIIMS இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, வெளியுறவுத் துறை அமைச்சகம், பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இந்தியாவின் எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.
ALSO READ: Good News: Iodine based sanitiser-களை வெளியிடப்போகும் உலகின் முதல் நாடாகப்போகிறது இந்தியா
டாக்டர் வி.கே. பால் செவ்வாயன்று நடந்த கூட்டத்தில், "சி.டி.சி, அமெரிக்கா மற்றும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின் பேரில் தடுப்பு மருந்தின் முதல் கட்ட டோஸ்களை பெறப்போகும் மக்களின் முன்னுரிமை பிரிவுகள் பற்றிய விரிவான ஆய்வை" வழங்கினார் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சமீபத்திய தடுப்பு மருந்து இருப்பு நிலை, சேமிப்பு நிலையத்தின் வெப்பநிலை, ஜியோ-டேக் சுகாதார மையங்கள் ஆகியவற்றை கண்காணித்து இதற்கான வசதி நிலை டேஷ்போர்டை பராமரிக்கக்க eVIN-ஆல் முடியும். இது COVID தடுப்பு மருந்து (COVID Vaccine) டெலிவரிக்காக மீண்டும் உருவாக்கப்படுகிறது," என்று அமைச்சகம் மேலும் கூறியது.
டாக்டர் பாலின் கூற்றுப்படி, இந்த தடுப்பு மருந்து, இதற்கான தேவை அதிகம் உள்ளவர்களிடையே முதலில் விநியோகிக்கப்படும். மேலும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் சுகாதாரப் பணியாளர்களின் பட்டியல் தயாராக இருக்கும்.
இந்தியாவில் தற்போது மூன்று தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. Bharat Biotech இண்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்படும் Covaxin, COVID-19 ஐ சமாளிக்க உள்நாட்டிலேயே தயாரிக்கபட்ட முதல் தடுப்பு மருந்தாகும். கோவாக்சின் தற்போது நாட்டில் இரண்டாம் கட்ட மனித சோதனைகளில் உள்ளது.
ALSO READ: Shocking ஆய்வு: Smartphones, Currency note-களில் 28 நாட்களுக்கு இருக்கும் Corona Virus
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR