நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடக்கம்; பல்வேறு மசோதாகள் நிறைவேற்றம்!

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..!

Last Updated : Nov 18, 2019, 10:27 AM IST

Trending Photos

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடக்கம்; பல்வேறு மசோதாகள் நிறைவேற்றம்! title=

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..!

டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர் காலக்கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. 20 அமர்வுகளைக் கொண்ட இந்த தொடர் அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்நாட்டு உற்பத்தி வரியைக் குறைக்கும் அவசர சட்டமும், இ-சிகரெட்களின் விற்பனை தயாரிப்புக்கு தடை விதிக்கும் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாற்றான மசோதாக்கள் இந்த தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொடரில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து, காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு, பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை சட்ட மசோதாவை நிறைவேற்றும் மத்திய அரசின் முயற்சி உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதன் முறையாக இந்த தொடரில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. முன்னதாக, நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வேலைவாய்ப்பின்மை உள்பட அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், சிறிய வேறுபாடுகளால் கூட்டணிக் கட்சிகள் விலகக் கூடாது என்று வலியுறுத்தினார். ஒரு பெரிய குடும்பத்தைப் போல் ஒற்றுமையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் மகத்தான வெற்றியை தேர்தலில் அளித்துள்ளதால், அந்த வெற்றிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார். 

 

Trending News