ஐயோ!! மறுபடியும் முதல இருந்தா..5 மாநிலத்தை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா

Covid-19 Cases in India: இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ள மாறுபாடு XBB.1.5 ஆகும். இது தவிர BQ.1,BA.2.75, CH.1.1, XBB மற்றும் XBF ஆகிய வைரஸின் தொற்றும் பரவி வருகின்றது. இவை கண்காணிக்கப்படும் புதிய வகைகளாகும். கடந்த வாரங்களில் XBB.1.5 உலகளவில் 37.7% வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியா உட்பட 85 நாடுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 23, 2023, 04:38 PM IST
  • கடந்த மூன்று மாதங்களில் 196 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜனவரி மாதத்தில் இந்த மாறுபாட்டின் 2 தொற்றுகள் பதிவானது.
  • உலக அளவில் சராசரி தினசரி தொற்று எண்ணிக்கை - 93,977
ஐயோ!! மறுபடியும் முதல இருந்தா..5 மாநிலத்தை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா title=

கோவிட்-19 ஓமிக்ரான்: நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓமிக்ரான் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பரவலாகப் பார்த்தால், இவை இந்தியாவில் பரவியிருக்கின்றன. இதனிடையே BA.1, BA.2, BA.5, BQ.1, BA.4, BA 2.12.1 XBB, BA 2.75, இவை அனைத்தும் ஓமிக்ரானின் மாறுபாடுகள் ஆகும். மேலும் ஓமிக்ரானின் 1000 வகைகளில், 100 மறுசீரமைப்பு பதிப்புகள் இந்த நேரத்தில் பரவுகின்றன. இந்த நேரத்தில் XBB1.5 மற்றும் XBB 1.16 ஆகியவை Variant Of Interest ஆகும், மேலும் இதில் தற்போது விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல் Variant Of Interest வேகமாக பரவும் தொற்றாகும் ஆனால் அவை ஆபத்தானவை அல்ல என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் மரபணு வரிசைமுறையில் கொரோனாவின் பல்வேறு மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், மற்ற அனைத்து வகைகளின் பாதிப்புகளும் குறைந்து வருகின்றன, அதே நேரத்தில் கொரோனா XBB.1.16 இன் இந்த மாறுபாட்டின் பாதிப்புகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தில் இந்த மாறுபாட்டின் 2 தொற்றுகள் பதிவானது, அதேபோல் மார்ச் மாதத்தில் இந்த மாறுபாட்டின் 204 தொற்றுகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 344 பேர் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மாறுபாடு மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லியில் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், இனி இவை கூடுதலாக கிடைக்கும்

இது தவிர, XBB.1.5 தொற்றுகளின் எண்ணிக்கையும் கடந்த மூன்று மாதங்களில் 196 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஜனவரியில் 46 பாதிப்பு இருந்த நிலையில், பிப்ரவரியில் 103 ஆகவும், மார்ச்சில் 47 ஆகவும் அதிகரித்துள்ளது. மறுபுறம் XBB.2.3 என்பது தற்போது அதிகரித்து வரும் ஒரு புதிய மாறுபாடாகும்.

உலக அளவில் சராசரி தினசரி தொற்று எண்ணிக்கை - 93,977

* மொத்த 19% அமெரிக்காவில் இருந்து பதிவாகியுள்ளன.

* ரஷ்யாவில் 12.9

* சீனாவில் 8.3%

* தென் கொரியாவில் 7%

* இந்தியாவில் 1% பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தினமும் சராசரியாக 966 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் உலக அளவில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் பாதித்துள்ளனர். பிப்ரவரியில் தினசரி சராசரியாக 108 தொற்று எண்ணிக்கை இருந்தன. மார்ச் மாதத்தில் வாராந்திர இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளது. இதற்குப் பிறகு தமிழ்நாடு, டெல்லி, இமாச்சல் மற்றும் ராஜஸ்தான் என மொத்தம் 8 மாநிலங்களில் இருந்து அதிகபட்சமாக எண்ணிக்கை பதிவாகி உள்ளன.

உலகில் அழிவை ஏற்படுத்துகிறது XBB.1.5 மாறுபாடு
இதனிடையே தற்போது இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ள மாறுபாடு XBB.1.5 ஆகும். இது தவிர BQ.1,BA.2.75, CH.1.1, XBB மற்றும் XBF ஆகிய வைரஸின் தொற்றும் பரவி வருகின்றது. இவை கண்காணிக்கப்படும் புதிய வகைகளாகும். கடந்த வாரங்களில் XBB.1.5 உலகளவில் 37.7% வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியா உட்பட 85 நாடுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை! குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News