புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம், பொது சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பொழுது கொரோனா முன்னெச்சரிக்கை, தடுப்பூசி, கொரோனா வழிகாட்டு நெறிமுறை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,134 புதிய கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் டெல்லியில் மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். டெல்லியில் திங்களன்று தேசிய தலைநகரில் கொரோனா பரவல் விகிதம் 6.98 சதவீதத்துடன் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 3.95 சதவீத கொரோனா பரவல் விகிதத்துடன் 72 கோவிட் -19 தொற்று பதிவானது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44,16,0279 ஆகவும், கொரோனா இறப்பு எண்ணிக்கை 53,0813 ஆக உள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, தினசரி கொரோனா பரவல் விகிதம் 1.09 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.98 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: Covid-19 Guidelines: அதிகரிக்கும் கொரோனா...புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ