சிலைகளை தாக்குவதால் தலைவர்களின் பெருமையை அழிக்க முடியாது: பிரியங்கா காந்தி

இந்திய தலைவர்களின் சிலைகளை தாக்குவதால் அவர்களை யாராலும் சிறுமைப்படுத்திவிட முடியாது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்!!

Updated: Sep 14, 2019, 07:46 PM IST
சிலைகளை தாக்குவதால் தலைவர்களின் பெருமையை அழிக்க முடியாது: பிரியங்கா காந்தி

இந்திய தலைவர்களின் சிலைகளை தாக்குவதால் அவர்களை யாராலும் சிறுமைப்படுத்திவிட முடியாது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் நேற்று மகாத்மா காந்தியின் சிலை மீது மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி சிலையை சேதப்படுத்தினர். உடலில் இருந்து தலைப்பகுதி நீக்கப்பட்ட நிலையில் காந்தியின் சிலை சிதைக்கப்பட்டு இருந்தது. இதற்க்கு முன்னர் இதே மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் பாபா சாகிப் அம்பேத்கர் சிலையின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த தாக்குதல்கள் தொடர்பாக  டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் பதிவில்; மகாத்மா காந்தி, பாபா சாகிப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை தாக்குவதால் அவர்களை யாராலும் சிறுமைப்படுத்திவிட முடியாது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

‘சிலைகளை அவமரியாதை செய்யும் கோழைகளான சமூகவிரோதிகளுக்கு இந்த நாட்டின் உயர்ந்த மக்களை இருட்டில் அவமதிப்பது ஒன்றுதான் அவர்களின் வாழ்நாள் நோக்கமாக இருக்க முடியும். இப்படி சிலைகளை தாக்குவதால் அவர்களின் உயர்வை சிறுதுளியளவுக்கும் நீங்கள் சிறுமைப்படுத்திவிட முடியாது’ என பிரியங்கா பதிவிட்டுள்ளார்.