காவிரிக்காக மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்த கமல்ஹாசன்

‘‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டத்தில் பங்கேற்க்க மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்த கமல்ஹாசன்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 15, 2018, 07:34 AM IST
காவிரிக்காக மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்த கமல்ஹாசன் title=

காவிரிக்காக விவசாய சங்கங்களுடன் இணைந்து வரும் மே 19-ஆம் நாள் முதல் கூட்டம் நடத்தவுள்ளதா கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்தாபனரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று காவிரி பிரச்சினை குறித்து விவசாய சங்கங்களுடன் இணைந்து  ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் அவர்கள் தெரிவிக்கையில்... “காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்காக,  ஒரு விரிவான சந்திப்பை அனைத்து அமைப்புகளும் கலந்து விவாதித்தோம். அதன் அடிப்படையில், அனைத்து விவசாய அமைப்புகளின் ஆலோசனைப்படியும், பிற வல்லுநர்களின் வழிகாட்டுதல்படியும், காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்கிற தலைப்பில் களம் காணவும், போராட்ட ஒற்றுமையை உருவாக்கவும் விரும்புகிறோம்.

அதற்கான முதல் கூட்டத்தினை வரும் மே 19-ஆம் நாள் காலை 10 மணியளவில் சென்னை, பெரியமேட்டில் நடைபெறும். 

அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், நீர் மேலாண்மை வல்லுநர்கள், அக்கறையுள்ள பெருமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என இருகரம் கூப்பி அழைக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.

பின்னர் தமிழக எதிர்கட்சி தலைவரும் மற்றும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக மக்களின் நலன் என்ற ஒரு கொள்கையின் கீழ் பல கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளேன். அனைவரும் இணையவேண்டும். ஆளுங்கட்சியை அழைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகின்றேன்’’ என்று தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது, ‘‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து 17 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும்’’ என்று கூறினார்.

 

 

 

 

 

 

 

 

Trending News