கிங் மேக்கரான ஆன குமாரசாமி 43-இடங்கள் முன்னிலை!! இவர் யார்?

கர்நாடக சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் 43 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அந்தக் கட்சி, கிங் மேக்கராக உருவாகியுள்ளது!  

Last Updated : May 15, 2018, 10:45 AM IST
கிங் மேக்கரான ஆன குமாரசாமி 43-இடங்கள் முன்னிலை!! இவர் யார்? title=

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று காலையில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. 

இதையடுத்து, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 109 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால்,அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. மற்ற கட்சிகளின் உதவி இல்லாமல் பாஜக ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதேபோன்று, காங்கிரஸ் 68 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 43 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. அந்தக் கட்சி யாருக்கு ஆதரவளிக்கிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்பதால் அது, கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது. 

Trending News