ஆச்சரியம்! இந்த திருமணம் சட்டப்படி செல்லாது: கலெக்டர் அதிரடி!

ஆந்திராவில் 13 வயது சிறுவனை மணந்த 23 வயது பெண்ணின் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கர்னூல் மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்!  

Last Updated : May 16, 2018, 06:19 PM IST
ஆச்சரியம்! இந்த திருமணம் சட்டப்படி செல்லாது: கலெக்டர் அதிரடி! title=

கர்நாடக மாநிலம் சனிக்கனூரைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (23). இவருக்கும் ஆந்திர மாநிலம் கரனூல் மாவட்டம் உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் ஒருவனுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இந்த காதல் விவரம் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்த காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே, சிறுவனுக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி உப்பரகால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது. 

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. மைனர் பையனுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்தது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்தது தவறு என்று கருத்து கூறி வந்தனர். இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகியிருந்தனர். 

இதனைத்தொடர்ந்து, கர்னூல் மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணன் முன்பு நேற்று அந்த சிறுவனும், பெண்ணும் ஆஜரானார்கள். 

அவர்களிடமும் இது குறித்து கேள்வி எழுப்பிய ஆட்சியர். சட்டப்படி இந்த திருமணம் செல்லாது எனவும், சிறுவனுக்கு 21 வயது ஆன பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்வதை பற்றி அவர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்ததுடன், அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் தனிதனியே வாழ வேண்டும் என கூறி சமரசம் செய்துள்ளார்.

Trending News