தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவு முறைகள்

Breastfeeding diet ; இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்க வேண்டும் என்றால், 5 உணவு முறைகளை பின்பற்றினால் அதற்கான வாய்ப்பு அதிகம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 14, 2024, 05:30 PM IST
  • தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற கவலையா?
  • உணவு முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
  • இந்த 5 உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்
தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவு முறைகள் title=

 Lifestyle Tips Tamil : இளம் தாய்மார்கள் பலர் போதிய தாய்ப்பால் சுரப்பு இல்லை என கவலைப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்றால் அந்த சத்துகள் அனைத்தும் தாய்ப்பாலில் மட்டும் தான் கிடைக்கும். அதற்கு தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும் Galactogoguesக்கு தேவையான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்தவகையில் இயற்கையாகவே தாய் பாலை அதிகரிக்கும் 5 உணவுகளின் பட்டியலை பார்க்கலாம். 

வெந்தயம்

வெந்தயத்தில் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு வெந்தயத்தை ஊற வைத்துவிட வேண்டும். காலைநேரத்தில் எழுந்ததும் அந்த வெந்தயத்தையும் நீரையும் குடித்துவிட வேண்டும். தொடர்ச்சியாக இதனை செய்தால் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும். 

மேலும் படிக்க | மழையில் இருந்து தப்பிக்க... தரமான ரெயின்கோட் வாங்குங்க - ஆன்லைனில் கிடைக்கும் டாப் மாடல்கள் இதோ!

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகத்துக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் ஆற்றலும் இருக்கிறது. பொதுவாக இதனை வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் நிலையில் இளம் தாய்மார்களும் பெருஞ்சீரகத்தை உட்கொள்ளலாம். பெருஞ்சீரகத்தை ஊற வைத்தும் குடிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் கலந்தும் சாப்பிடலாம். ஆனால், பொதுவான இயற்கை மருத்துவத்தில் சொல்லப்படுகிறதே தவிர ஆங்கில மருத்துவத்தில் இதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. 

எள் உருண்டை

கால்சியத்தின் அதிக மூலம் பால் பொருட்களில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக எள் உருண்டைகளில் கிடைக்கும். தாய்ப்பால் கொடுக்கும் இளம் தாய்மார்கள் எள் உருண்டைகளை சாப்பிடலாம். கறுப்பு எள், பேரீச்சம்பழம், துருவிய தேங்காய் எல்லாம் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும், உடலுக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும். 

முருங்கை சாறு

முருங்கை ஜூஸில் கேலக்டாகோக் என்ற சத்து இருக்கிறது. இது இளம் தாய்மார்களுக்கு பால் உற்பத்திக்கு தேவையான போதுமான ஆற்றலை கொடுக்கும். சூப் செய்து குடிக்கலாம் அல்லது முருங்கக்கீரை பொறியல் செய்தும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு ஒரு கப் அளவு முருங்கக்கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு மாதம் குடித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

மசூர் பருப்பு சூப்

கேலக்டாகோக் சத்தைக் கொண்டிருக்கும் மற்றொன்று மசூர் பருப்பு. பால் உற்பத்தியை அதிகரிக்க இது உதவும். இதை பருப்பு சூப்பாகவோ அல்லது குழம்பாகவோ சாப்பிடலாம். ஒரு கப் அளவு தினமும் உட்கொள்வது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கும். ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு சிட்டிகை மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 

மேலும் படிக்க | இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News