Changes from January 1: 2024 புத்தாண்டு இன்னும் சில தினங்களில் வர உள்ளன. இந்தியாவில் ஜனவரி 1, 2024 முதல் பல புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையை கூட பாதிக்கலாம். இந்த புதிய மாற்றங்களில் பெரும்பாலானவை ஆன்லைன் பங்கு வர்த்தகம் உட்பட வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது டிமேட் கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஜனவரி 1, 2024 முதல் வங்கி லாக்கர் ஒப்பந்தம் முதல் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பது வர நடைமுறைக்கு வர உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்று பார்ப்போம்.
ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்:
வங்கி லாக்கர் ஒப்பந்தம் (Bank Locker Aggrement)
ஜனவரி 1, 2024க்குப் பிறகு வங்கி லாக்கர் ஒப்பந்தங்கள் மாற உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிசம்பர் 31, 2023க்குள் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட கடைசித் தேதியாக அறிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் புதிய லாக்கர் விதிகளில் கையெழுத்திட தவறினால், அவர்களின் லாக்கர்கள் முடக்கப்படும். மேலும் அவர்களால் லாக்கரை அணுக முடியாது. வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக மத்திய வங்கி ஒரு வருட காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ஆதார் அட்டை புதுப்பிப்பு (Aadhaar Card Update)
ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2023 ஆகும். இந்தத் தேதிக்குப் பிறகு, ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்களை செய்ய ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். முந்தைய காலக்கெடு செப்டம்பர் 14, 2023 ஆக இருந்தது. முகவரி, பெயர் மாற்றம், மொபைல் நம்பர் மாற்றம் உட்பட அனைத்தையும் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
டிமேட் நியமனம் (Demat Account)
பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது. டிமேட் (டிமெட்டீரியலைஸ்டு என்பதன் சுருக்கம்) முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பத்திரங்களை மின்னணு வடிவத்தில் வைத்திருக்க உதவுகிறது. ஜனவரி 1, 2024க்குள் அனைத்து டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களும் நாமினியை நியமிக்க வேண்டும் என்று செபி கட்டாயமாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் இதனை செய்யத் தவறினால், அவர்களால் பங்குகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது. டிமேட் நியமனத்திற்கான முந்தைய காலக்கெடு செப்டம்பர் 30 ஆக இருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
சிம் கார்டுகளுக்கு காகித அடிப்படையிலான KYC இல்லை (Sim Card)
புதிய சிம் கார்டை வாங்க இனி பயனர்கள் 2024 ஆம் ஆண்டின் முதல் பார்மை நிரப்பி கையெழுத்திட தேவையில்லை. தொலைத்தொடர்புத் துறையின் (DoT) புதிய அறிவிப்பின்படி, காகித அடிப்படையிலான (KYC) அனைத்து செயல்முறைகளும் ஜனவரி 1 முதல் நீக்கப்படும். இது தொலைத்தொடர்பு துறையில் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு மாணவர்களின் செலவை இரட்டிப்பாக்கும் கனடா (Canada Students)
கனடா அரசு வரும் ஜனவரி 1 முதல் அந்த நாட்டில் வந்து படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கான விதிகளில் மாற்றங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது, இது அவர்களின் வாழ்க்கைச் செலவு பண தேவையை இரட்டிப்பாக்கும் என்று குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார். கனடாவின் புதிய மாற்றம் இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்களின் வருகையை பெரிதாக பாதிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ