கள்ள காதலால் மனைவியை பிரிந்தாரா Amazon தலைமை நிர்வாகி!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஜோஸ், தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jan 11, 2019, 09:48 AM IST
கள்ள காதலால் மனைவியை பிரிந்தாரா Amazon தலைமை நிர்வாகி!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஜோஸ், தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜெப் பெஜோஸ்(54) மற்றும் அவரது மனைவி மெக்கென்சி(48) ஆகியோர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக தங்களது திருமணத்தை முடித்துக்கொண்டனர். தற்போது தங்களது 3 மகன்களுடன் வாழ்கை நடத்தி வரும் இத்தம்பதியர் பரஸ்பர விவாகரத்து செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெப் பெஜோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்... “நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் கூட்டாளிகளாக சேர்ந்து செயல்படுவோம்” எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இவர்களது பரிவிற்கான காரணம் என்ன என குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் தற்போது, ஜெப் பெஜோஸ்-ன் கள்ள காதல் தான் இவர்களது பிரிவிற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

National Enquirer அறிக்கையின்படி, Fox LA தொலைக்காட்சியின் முன்னாள் நடிகர் லாரன் சான்செஸுடன் உறவில் இருப்பதாகவும், அவர் ஹாலிவுட்டின் திறமைசார் முகவர் பேட்ரிக் வைட்டெல்லின் மனைவி எனவும் தெரியவந்துள்ளது. தற்போது சான்செஸ் அவரது கணவருடன் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருவதாகவும், சமீப காலமாக இவர் ஜெப் பெஜோஸ் உடன் நட்புறவில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜல்ஸ் நகரில் நடைப்பெற்ற அமேசான் நிறுவன கோல்டன் குளோப்ஸ் விழாவில் லாரன் சான்செஸ் மற்றும் ஜெப் பெஜோஸ் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், ஜெப் பெஜோஸ் மற்றும் மெக்கென்சி தம்பதியார் பிரிந்து வாழ்வது உறுதியாகியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் பெருமளவு பங்குகள் மெக்சென்சிக்கு உள்ளன. தற்போது இருவரும் பிரிவதால் பங்குகளும் பிரியும் என தெரிகிறது. எனவே அமேசான் நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது

More Stories

Trending News