இந்திய அணிக்கு எதிராக மெல்போனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 வயது சிறுவன் ஒருவன் 15-வது வீரராக தேர்வு செயப்பட்டுள்ளார்....
இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் துணை கேப்டனாக 7 வயதான ஆர்ச்சி ஸ்கில்லர் என்ற சிறுவன் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Thanks to everyone who saw the Australian and Indian teams at BUPA Family Day today, with @MartinPakulaMP officially opening the Indian Summer Festival!
The Festival will run on the 26th and 27th of December at Yarra Park, MCG, during the first two days of the Boxing Day Test. pic.twitter.com/FZbbc24iBK
— Cricket Australia (@CricketAus) December 23, 2018
இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்ச்சி சில்லர் எனும் 7 வயது சிறுவனை துணை கேப்டனாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. லெக் ஸ்பின்னரான ஆர்ச்சி, மெல்பெர்ன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக பெய்னுடன் இணைந்து செயல்படுவார். நாதன் லயனின் ரசிகரான ஆர்ச்சிக்கு நாதன் லயனே ஆஸி அணிக்கான சீருடைய வழங்கி கெளரவித்தார். சிறுவன் சேர்க்கப்பட்டதற்கு அவனது உடல்நிலைதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இருதய கோளாறு காரணமாக அந்த சிறுவனுக்கு இதுவரை 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஆயுள்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Watch out Nathan Lyon, Archie's coming for your spot!
MORE: https://t.co/zOHu6KpvYE pic.twitter.com/PEgW1qSITd
— cricket.com.au (@cricketcomau) December 23, 2018
இந்நிலையில், கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாவதே தனது கனவு என தெரிவித்துள்ளான். இதனையடுத்து அந்த சிறுவன் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டு, இணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளான். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கி விக்கெட் எடுப்பேன் என்று அந்த சிறுவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.