Good Luck: புதனின் அருளைப் பெற புதனன்று வெற்றிலை சாப்பிட வேண்டாம்!

இந்து மத நம்பிக்கையின்படி,  திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாள், செவ்வாய் அனுமனுக்கு உரியது, புதன் கிழமை விநாயகர் மற்றும் புதன் கிரகத்துடன் தொடர்புடையது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 06:00 AM IST
  • புதன்கிழமையில் விநாயகர் வழிபாடு சிறப்பு
  • கடன் கொடுக்க உகந்த நாள் எது?
  • மூன்றாம் பாலினத்தவருக்கு தானம் செய்ய வேண்டிய நாள் எது?
Good Luck: புதனின் அருளைப் பெற புதனன்று வெற்றிலை சாப்பிட வேண்டாம்!  title=

புதுடெல்லி: இந்து மத நம்பிக்கையின்படி,  திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாள், செவ்வாய் அனுமனுக்கு உரியது, புதன் கிழமை விநாயகர் மற்றும் புதன் கிரகத்துடன் தொடர்புடையது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கடவுள் அல்லது கிரகத்துடன் தொடர்புடையது. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால். செவ்வாய் என்பது துர்க்கை மற்றும் ஹனுமானுடன் (Lord Hanuman) தொடர்புடையது.

அதேபோல் புதன்கிழமை, விநாயகப் பெருமானுக்கும் புதன் கிரகத்துக்கும் தொடர்புடைய நாள். புதன்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்வது வாழ்வில் நலம் தரும். அதேபோல, ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிழமை சில வேலைகளை செய்யாமல் இருந்தால் வாழ்க்கையில் நலம் பெறலாம்.
 
புதன்கிழமை என்ன செய்யக்கூடாது (What should not do on Wednesday)
புதன் கிழமையன்று பெண்களை அவமதிக்க கூடாது. புதன்கிழமையன்று மூன்றாம் பாலினத்தவரை அவமதித்தால், வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். புதன் கிழமையில் திருநங்கை அல்லது திருநம்பிக்கு தானம் செய்வது நலம் தரும்.  

ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிழமைகளில் வெற்றிலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். புதன்கிழமையன்று வெற்றிலை சாப்பிட்டால், அதிக செலவாகும் என்று கூறப்படுகிறது. அதோடு பணத் தட்டுப்பாடும் (fiancial problems) எழலாம்.

புதன்கிழமை வீட்டில் பால் கெட்டுப்போவது, பொங்கி வீணாவது அசுபமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நாளில் பாலை கவனமாக கையாளவும்.  

இந்து மத நம்பிக்கையின்படி, புதன்கிழமை கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதன்கிழமை கடன் கொடுப்பதால் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படும்.

ALSO READ | கருடபுராணத்தின் இந்த 7 விஷயங்களை கடைபிடித்தால் நரகமே இல்லையாம்!

புதன் கிழமையன்று புதிய காலணிகள் அல்லது ஆடைகள் வாங்குவது அசுபமாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்தால் பாதிப்பு ஏற்படலாம். இது தவிர தலைமுடி தொடர்பான பொருட்களையும் வாங்கக்கூடாது.

ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிழமையன்று ஒரு ஆண்ம் தன் மாமியார் வீட்டிற்கு செல்லக்கூடாது. மேலும், புதன்கிழமை பயணம் செய்வதை தவிர்க்கலாம். ஜாதகத்தில் புதன் கிரகம் அசுப நிலையில் இருந்தால் பயணங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வாழ்க்கையில் வரும் தொல்லைகள் விலக, புதன் கிழமை பசுவுக்கு புல் கொடுக்க வேண்டும். இத்துடன் புதன் கிரகத்தின் அசுப பலன்கள் மட்டுப்படும் என்று நம்பப்படுகிறது.

(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை.)

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News