பெண் குழந்தைகளுக்கு பம்பர் பலன்கள்... ரூ. 50 ஆயிரம் தரும் மாநில அரசு!

Baghyalakshmi Yojana: பெண் குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் வரை நிதி உதவி கிடைக்கும் திட்டம் உத்தர பிரதேச அரசால் செயல்படுத்தப்படுகிறது.  

Written by - Sudharsan G | Last Updated : Sep 2, 2023, 05:06 PM IST
  • கல்வி செலவுகளுக்கு அரசு இதனை வழங்குகுகிறது.
  • இதனால், படிப்பில் முன்னேற வாய்ப்பும் கிடைக்கும்.
  • பிறக்கும்போதே நிதியுதவி வழங்கப்படும்.
பெண் குழந்தைகளுக்கு பம்பர் பலன்கள்... ரூ. 50 ஆயிரம் தரும் மாநில அரசு!  title=

Baghyalakshmi Yojana: மத்திய, மாநில அரசுகள் மூலம் பல அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன்மூலம் பல்வேறு பயனர்களுக்கு அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அத்தகைய அரசாங்கத் திட்டத்தைப் பற்றி இன்று இங்கு நீங்கள் காணலாம். 

இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் மாநில அரசிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கமாகப் பெறுவீர்கள். உத்தர பிரதேச அரசு மகள்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது சிறப்பு. இப்போது நீங்கள் பாக்ய லக்ஷ்மி யோஜனாவின் கீழ் பெரும் பலன்களைப் பெறலாம். இதன் மூலம், உங்கள் மகளுக்கு நிதி உதவியும், படிப்பில் முன்னேற வாய்ப்பும் கிடைக்கும்.

பாக்யலட்சுமி யோஜனா என்றால் என்ன?

பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன், பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் பயன்படுத்தப்படலாம். உத்தர பிரதேச பாக்ய லக்ஷ்மி யோஜனா மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பும் ஊக்குவிக்கப்பட உள்ளது.

ரூ. 50 ஆயிரம் வழங்கும் அரசு

மாநில அரசின் இந்த திட்டத்தின் கீழ், BPL குடும்பங்களின் மகள்கள் பிறக்கும் போது ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்த பணம் வழங்கப்படுகிறது. இதனுடன், பெண்களின் கல்வியை மேம்படுத்த, வகுப்பு வாரியாக பணம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ISRO: இந்தியாவின் தலைசிறந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் இவ்வளவு தானா?

இந்த திட்டத்தை யார் யார் பயன்படுத்திக் கொள்ளலாம்?

- விண்ணப்பிக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- பெண்ணுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்யக்கூடாது.
- இது தவிர, பெண்ணின் பெற்றோர் உத்தர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
- மார்ச் 31, 2006க்குப் பிறகு, BPL குடும்பங்களில் பிறந்த அனைத்துப் பெண்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் இரண்டு மகள்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். 

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

- பெற்றோரின் ஆதார் அட்டை
- குடியிருப்பு சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- பிறப்புச் சான்றிதழ்
- வங்கி கணக்கு பாஸ்புக்
- மொபைல் எண்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mahilakalyan.up.nic.in/ மூலம் விhttps://mahilakalyan.up.nic.in/ண்ணப்பிக்கலாம். இது தவிர, இந்த இணைப்பின் உதவியுடன் https://pmmodiyojana.in/wp-content/uploads/2022/10/Bhagya.pdf , நீங்கள் படிவத்தை நேரடியாக பதிவிறக்கம் செய்து நிரப்பலாம். இதன்படி படிப்புக்கு பணம் பெறப்படுகிறது, இது தவிர, மகளுக்கு 6ஆம் வகுப்புக்கு ரூ.3000, 8ஆம் வகுப்புக்கு ரூ.5 ஆயிரம், 10ஆம் வகுப்புக்கு ரூ.7 ஆயிரம், 12-ம் வகுப்புக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் படிக்க | செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் செய்யவேண்டிய முக்கிய பணிகள்: மறந்தால் சிக்கல்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News