நோ வரி...! உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு... 5 சிறப்பான திட்டங்கள்

Best Five Schemes: குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் பணத்தை சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள், இந்த ஐந்து சிறப்பான திட்டங்களை தெரிந்துவைத்திருப்பது அவசியமாகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2023, 04:19 PM IST
  • முதலீட்டு திட்டங்களை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.
  • இதனால், எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.
  • 5 திட்டங்கள் குறித்து முழுமையாக இதில் காணலாம்.
நோ வரி...! உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு... 5 சிறப்பான திட்டங்கள் title=

நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் பல்வேறு வழிகளில் உதவும் நோக்கத்துடன் அரசாங்கம் பல முதலீட்டு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டு வாய்ப்புகளாகப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அரசாங்க திட்டங்கள் உள்ளன.

பெற்றோர்கள் தங்கள் முதலீட்டு நோக்கம், ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் வரி பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு திட்டத்தை தேர்வு செய்யலாம். இருப்பினும், எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன், திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இங்கு, அரசின் ஐந்து திட்டங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை அறிந்துகொண்டு, உங்கள் முதலீட்டு திட்டத்தை தேர்வு செய்யவும்.

5 முதலீடு திட்டங்கள்

1. பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF)

PPF திட்டம் சிறந்த வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான மற்றும் நல்ல நீண்ட கால முதலீட்டுக்கான ஆப்ஷனாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரில் தொடங்கும் PPF கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு. உங்கள் வருமானம் மற்றும் நிதி நோக்கங்களைப் பொறுத்து, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 

8th Pay Commission மாஸ் அப்டேட்: விரைவில் எக்கச்சக்க ஊதிய உயர்வு, குஷியில் ஊழியர்கள்

2. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு 

குழந்தைகள் முதலீட்டுத் திட்டத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் டெபாசிட் விகிதம், மிக அதிகமாகும். கால அளவு ஆப்ஷன் இதில், இருப்பது நல்ல ஆப்ஷன்களில் ஒன்றாகும். ஈக்விட்டி ஃபண்டுகள், 12 முதல் 15 சதவீதம் வரையிலான நல்ல ஆண்டு வருமானத்தை அளித்துள்ளன.

3. ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS)

பரஸ்பர நிதி முதலீட்டு விருப்பமான  ELSS-இன் லாக்-இன் காலம் மூன்று ஆண்டுகள். அதிக வருமானம் வழங்கப்படுகிறது, மேலும் பிரிவு 80C வரி விலக்குகளும் உள்ளன. இது, வரியைச் சேமிப்பதில் உங்களுக்கு உதவுவதோடு, நல்ல வருமானத்தையும் உங்களுக்கு வழங்குகிறது.

4. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)

NSC என்பது ஐந்து வருட லாக்-இன் காலம். நிலையான வட்டி விகிதத்துடன் கூடிய நிலையான வருமான முதலீட்டு விருப்பமாகும். வட்டிக்கு வரி விதிக்கப்பட்டாலும், முதலீட்டாளர் பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.

5. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது இந்திய அரசின் திட்டமாகும், இது பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்காக பணத்தை சேமித்து வைக்க ஊக்குவிக்கிறது. மகளுக்கு 10 வயது ஆகும் வரை எந்த தபால் நிலையத்திலும் கணக்கு தொடங்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டம் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ. 1000 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். 

சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை பெண் குழந்தைக்கு 14 வயது வரை டெபாசிட் செய்யலாம் என்றும், கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆண்டுக்கு 8.6 சதவீதம் கூட்டுவிகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 18 வயது ஆன பிறகும் பகுதி திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | உங்கள் ரயில் டிக்கெட்டில் வேறொருவரை பயணம் செய்ய வைப்பது எப்படி தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News