10-வது முடித்தவர்களுக்கு ரூ.35400 ஊதியம்... எங்கே தெரியுமா?

பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் 6-12-2019 வரை விண்ணப்பிக்கலாம் என மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Updated: Nov 18, 2019, 09:48 AM IST
10-வது முடித்தவர்களுக்கு ரூ.35400 ஊதியம்... எங்கே தெரியுமா?

பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் 6-12-2019 வரை விண்ணப்பிக்கலாம் என மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

குறித்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதிப்படியான ஊதியம் 35400 வரை அளிக்கப்படும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி, விண்ணப்பக் கட்டணம், வேலைக்கான தேர்வு செயல்முறை, வேலைக்கான வயது வரம்பு, பதவிகளின் விவரங்கள், பதவிகளின் பெயர்கள், வேலைக்கான கல்வித் தகுதிகள், மொத்த பதவிகளின் எண்ணிக்கை தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

பதவியின் பெயர் - பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அதிகாரி

மொத்த காலியிடம் - 92

பணியிடம் - மும்பை

தேர்வு - எழுத்துத் தேர்வின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் விண்ணப்பம் படிவத்தின் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், கல்வி மற்றும் பிற தகுதிகள், பிறந்த தேதி மற்றும் பிற தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன், சுய கையொப்ப நகல்களுடன் விண்ணப்பித்து, உரிய தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.