அட்டகாசமான அப்டேட்..மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்: நல்ல செய்தி சொன்ன முதல்வர்

Old Pension Scheme: நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 14, 2023, 04:53 PM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு.
  • இமயமலை மாநிலமான சிக்கிமில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
  • தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது?
அட்டகாசமான அப்டேட்..மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்: நல்ல செய்தி சொன்ன முதல்வர் title=

பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. 

அந்த வரிசையில் இமயமலை மாநிலமான சிக்கிமில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல செய்தியை சிக்கிம் முதல்வர் பிஎஸ் தமாங்-கோலே திங்கள்கிழமை (செப்டம்பர் 11) அன்று தெரிவித்தார். நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் சிக்கிம் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், சிக்கிம் அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை அமைத்தது.
இந்த குழுவுக்கு சிக்கிம் பணியாளர் துறை செயலாளர் ரின்சிங் செவாங் பூட்டியா தலைமை தாங்கினார்.

மேலும், சிக்கிம் மாநிலத்தில் "ஒரு குடும்பம் ஒரு வேலை" (“one family one job”) என்ற விதி விரைவில் முறைப்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான (Old Pension Scheme) போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களில் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக சமீபத்தில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக ‘சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் அரசு ஊழியர்கள் ஒன்றாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்போது பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். முன்னதாக ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கியில் பணியாற்ற விருப்பமா... 450 காலியிடங்கள் இருக்கு.. மிஸ் பண்ணாதீங்க!

தேசிய ஓய்வூதியத் திட்டம் vs புதிய ஓய்வூதியத் திட்டம்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)

1. NPSல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

2. தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.

3. இதன் கீழ், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற NPS நிதியில் 40% முதலீடு செய்ய வேண்டும்.

4. இந்தத் திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.

5. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

1. இதன் கீழ், கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம், ஓய்வுக்குப் பிறகு மொத்தத் தொகையுடன் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

2. 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஏற்பாடும் உள்ளது. ஜி.பி.எஃப்-க்கான ஏற்பாடும் உள்ளது.

3. இதன் கீழ், 20 லட்சம் ரூபாய் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது.

4. இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. பணியாளரின் சம்பளத்தில் இருந்தும் பணம் கழிக்கப்படுவதில்லை.

5. ஓய்வு பெற்ற ஊழியரின் மனைவிக்கு அவர் இறந்தவுடன் ஓய்வூதியம் வழங்கும் வசதி இதில் உள்ளது. இதன் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டிஏவும் வழங்கப்படுகிறது. இதனால், ஓய்வூதியத் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க | புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிக விரைவில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News