பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரும் முடிவை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஹரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படாது என்று ஹரியானா அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று சட்டசபையில் முதல்வர் மனோகர் லால், பழைய ஓய்வூதியம் குறித்து மத்திய அரசு முடிவெடுத்த பிறகே மாநில அரசு இது குறித்து முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.
ஒருபுறம், ஹரியானா ஊழியர் அமைப்புகள் பழைய ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், மறுபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு பின்வாங்கியுள்ளது. ஊழியர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, ஓபிஎஸ் விவகாரம் குறித்து அறிக்கை அளிக்க அரசால் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை, முதல்வர் மனோகர் லால் இந்த பிரச்சினையில் அரசின் நிலைப்பாட்டை சட்டசபையில் தெளிவுபடுத்தினார்.
மேஹம் பகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏவான பால்ராஜ் குண்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசிடம் பதில் கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு சபையில் விவாதம் நடத்த முடியவில்லை, ஆனால் அதற்கு அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மாநில ஊழியர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதை ஹரியானா அரசு சபையில் ஏற்றுக்கொண்டது.
மத்திய அரசு 2001ல் குழுவை அமைத்தது
2001ம் ஆண்டு, ஓய்வூதியத்தின் பெரும் நிதிப் பொறுப்பு குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டதாக, முதலமைச்சர் சபையில் தெரிவித்தார். குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஓய்வூதிய பொறுப்புகளை செலுத்துவதற்கு ஒரு நிதியை ஒதுக்குவதற்காக, ஜனவரி 1, 2004 முதல் மத்திய அரசு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியது. இது இப்போது தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்று அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்!!
என்பிஎஸ் 2006ல் அமலுக்கு வந்தது
இதற்குப் பிறகு 2006 ஜனவரி 1-ம் தேதி அப்போதைய ஹரியானா அரசு ஊழியர்களுக்கு என்பிஎஸ் அமல்படுத்தியதாக முதல்வர் மனோகர் லால் தெரிவித்தார். NPS தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் அப்படியே இருக்கின்றன. தற்போது ஹரியானா அரசு தனது ஊழியர்களுக்கு 14 சதவீதம் என்ற விகிதத்தில் ஓய்வூதிய பொறுப்புகளுக்கு மாதாந்திர பங்களிப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் ஊழியர் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது.
ஹரியானாவில் ஓபிஎஸ் அமலாக்கம் குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ள நிலையில், சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மாநில அரசு பொதுவாக மத்திய அரசை பின்பற்றுகிறது என்று கூறினார். தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆராய இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுத்த பிறகே மாநில அரசு இது தொடர்பாக முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமக்கலை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், செங்கொடி சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ