பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் BMW-க்கு வந்த சோதனை!

சொகுசு கார் உற்பத்தியாளர் BMW தனது இரண்டு பைக்குகளான G310R மற்றும் G310GS ஆகியவற்றை அமெரிக்காவில் திரும்ப அழைத்துள்ளது!

Updated: Aug 31, 2019, 04:45 PM IST
பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் BMW-க்கு வந்த சோதனை!

சொகுசு கார் உற்பத்தியாளர் BMW தனது இரண்டு பைக்குகளான G310R மற்றும் G310GS ஆகியவற்றை அமெரிக்காவில் திரும்ப அழைத்துள்ளது!

இரண்டு பைக்குகளின் பிரேக்குகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக நிறுவனம் பைக்குகளை திரும்ப அழைத்ததாக நம்பப்படுகிறது, இதனால் நிறுவனம் பிரேக்குகளின் செயலிழப்பை சரிசெய்ய முடியும் என நம்புகிறது. இந்த அழைப்பின் மூலம் இந்நிறுவனம் 5,938 யூனிட்களை திரும்ப அழைத்துள்ளது, இந்த பைக்குகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு பைக்குகளின் பயன்பாட்டின் போது, BMW G310R மற்றும் G310GS ஆகியவற்றின் பிரேக்குகள் விசித்திரமாக ஒலித்து அறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பிரேக்குகளும் குறைவாகவே இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இது பைக்குகளின் சிறந்த செயல்திறனை குறைத்துள்ளதாக இந்நிறுவனம் கருதுகிறது. 
வாடிக்கையாளர் புகாருக்குப் பின்னர் குறிப்பிட்ட இந்த இரண்டு பைக்குகளை நிறுவனம் திரும்ப அழைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக 2017 மற்றும் 2019-க்கு இடையில் தயாரிக்கப்பட்ட மாடல்களை நிறுவனம் திரும்ப அழைத்துள்ளது.

உங்கள் தகவலுக்கு, இந்த பைக்குகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பிரேக்குகளை சரிசெய்ய நேரடியாக BMW மோட்டராட் டீலர்ஷிப்பாளர்களிடன் செல்லலாம், மேலும் இதற்கு எந்த வகையிலும் கட்டணம் வசூலிக்கப்படாது. திரும்ப அழைக்கப்பட்ட பைக்குகளை இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் நிறுவனம் சரிசெய்யத் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பு: பழுது கண்டுப்பிடிக்கப்பட்ட அதே BMW யூனிட்டில், இந்தியாவில் எந்த பைக்குகளும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.