LPG Booking Offer: எல்பிஜி விலை உயர்விலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் உங்களுக்கு நிவாரணம் அளிக்குமா என்பது தெரியாது, ஆனால் எல்பிஜி சிலிண்டரை நீங்கள் மலிவாக முன்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு நீங்கள் Paytm மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த சலுகையைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
பேடிஎம் மூலம் எல்பிஜி முன்பதிவு செய்தால் கேஷ்பேக்
நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை (LPG Cylinder) முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ .2,700 நேரடி நன்மை கிடைக்கும். பேடிஎம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை அறிவித்துள்ளது.
Paytm, 3 Pay 2700 கேஷ்பேக் ஆஃபர் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. புதிய பயனர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முதல் முன்பதிவில் ரூ .900 வரை நிச்சய கேஷ்பேக் பெறுவார்கள்.
இந்த சலுகையின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த கேஷ்பேக் முதல் முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால், முதல் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். இந்த கேஷ்பேக் ரூ .10 முதல் ரூ .900 வரை இருக்கும்.
ALSO READ: LPG Gas Cylinder இணைப்பு பெறுவது எளிதாகி விட்டது: இந்த வசதி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இந்த கூடுதல் சலுகையும் கிடைக்கும்
இது தவிர, Paytm தற்போதுள்ள பயனர்களுக்கு ஒவ்வொரு முன்பதிவுக்கும் நிலையான வெகுமதிகளை வழங்குகிறது. 5000 வரையிலான கேஷ்பேக் புள்ளிகளும் கிடைக்கும். இவற்றை டாப் பிராண்டுகளின் சிறந்த டீல்கள் மற்றும் பரிசு வவுச்சர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Paytm சமீபத்தில் தனது செயலியில் ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்துள்ளது. இதில் பயனர்கள் முன்பதிவு செய்த பிறகு சிலிண்டரின் விநியோகத்தையும் கண்காணிக்க முடியும். இது தவிர, சிலிண்டரை நிரப்புவதற்கான நினைவூட்டலும் தொலைபேசியில் வரும்.
இந்த '3 Pay 2700 Cashback Offer' 3 முக்கிய எல்பிஜி நிறுவனங்களான - இண்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத்காஸ் ஆகியவற்றின் சிலிண்டர்களை முன்பதிவு செய்பவர்களுக்கு கிடைக்கும். பேடிஎம் போஸ்ட்பெய்டு என பிரபலமாக அறியப்படும் 'பேடிஎம் நவ் பே லேட்டர்' திட்டத்தில் பதிவு செய்து அடுத்த மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கான (LPG Cylinder Booking) கட்டணத்தைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
கேஷ்பேக் பெறுவது எப்படி?
- முதலில் Paytm செயலியைப் பதிவிறக்கவும்.
- அதன் பிறகு சிலிண்டர் முன்பதிவுக்குச் செல்லவும். பின்னர் உங்கள் எரிவாயு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதில், நீங்கள் பாரத் கேஸ், இந்தேன் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று ஆப்ஷன்களைக் காண்பீர்கள்.
- இதற்குப் பிறகு உங்கள் பதிவு எண் அல்லது எல்பிஜி ஐடி அல்லது வாடிக்கையாளர் எண்ணை உள்ளிடவும்.
- இந்த தகவலை பூர்த்தி செய்த பிறகு, Proceed பொத்தானை அழுத்தி பணம் செலுத்தலாம்.
ALSO READ: Paytm மூலம் ரூ.1000 வரை வட்டியில்லா கடன் வாங்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR