PF balance, EPFO வட்டி பற்றி தெரிந்துக் கொள்ள சுலபமான வழிகள்

2019-20 ஆம் ஆண்டிற்கான EPFO வட்டி எவ்வளவு என்பதையும், PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது என்பதையும் சுலபமாக தெரிந்துக் கொள்ளும் வழிமுறைகள் தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2020, 03:53 PM IST
  • PF balance தெரிந்துக் கொள்ள சுலபமான வழி
  • EPFO வட்டி எப்போது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்?
  • வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?
PF balance, EPFO வட்டி பற்றி தெரிந்துக் கொள்ள சுலபமான வழிகள் title=

புதுடெல்லி: 2019-20 ஆம் ஆண்டிற்கான EPFO வட்டி எவ்வளவு என்பதையும், PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது என்பதையும் சுலபமாக தெரிந்துக் கொள்ளும் வழிமுறைகள் தெரியுமா? 

2019-20 ஆம் ஆண்டிற்கான ஊழியர் சேமநல நிதி (EPFO) வட்டி எவ்வளவு என்பதை ஆண்டு இறுதியில் தெரிந்துக் கொள்வதற்கு சந்தாதாரர்கள் ஆவலுடன் இருப்பார்கள். திட்டமிட்டபடி, காலக்கெடுவிற்கு முன்பே வட்டி அறிவிக்கப்பட வேண்டும். அது சந்தாதாரகளின் கணக்குகளில் சேர்ப்பதும் முக்கியமான பணியாகும். செலுத்த வேண்டும். EPFO வட்டியை அறிவிக்கும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது அறிவிக்கப்படலாம். அதிலும். அதிகாரப்பூர்வமாக, 2021 ஜனவரி முதல் தேதிக்கு முன்னர் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளில் வட்டித்தொகை வரவு வைக்கப்பட வேண்டும். 

அதை ஒரே தவணையாக கணக்கில் செலுத்த இது கொடுக்க வேண்டும், இந்த வட்டி விகிதம் (Interest Rate) 2019-20 ஆம் ஆண்டில் 8.5 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு செப்டம்பரில், பணியாளர் அமைச்சகத்தின் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையிலான அறங்காவலர் கூட்டத்தில் 8.5 சதவீத வட்டியை 8.15 சதவிகிதம் மற்றும் 0.35 சதவிகிதம் என இரண்டு தவணைகளாக பிரிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்திருந்தது, ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆறு கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் EPFO வட்டி வீதக் கடன் செலுத்தப்படும்.

Also Read | ஜனவரி 1 முதல் SBI காசோலை செயல்முறையில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே

2019-20 ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் மீதான 8.5 சதவீத வட்டி விகிதத்திற்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்க நிதி அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளது என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகின. கொரோனா வைரஸ் (Cornoavirus) காலகட்டத்தில், பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதால், EPFO இந்த ஆண்டு வட்டித் தொகையை செலுத்துமா என்ற கேள்விகள் எழுந்தன.  

உங்கள் கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டவுடன், அதை எப்படி வீட்டில் இருந்தபடியே சரிபார்ப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? சரி, உமங் செயலி (UMANG app) மூலம்  மிக எளிதாக கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதை தெரிந்துக் கொள்ளலாம்.

Also Read | PAN Card வைத்திருக்கும் அனைவரும் ITR தாக்கல் செய்ய வெண்டுமா?

UMANG app மூலம் EPF இருப்பை சரிபார்க்கும் முறை:

Step 1. உங்களிடம் UMANG செயலி இல்லை என்றால் அதை முதலில் பதிவிறக்கவும்
Step 2. செயலியை திறக்கவும்
Step 3. EPFO ஐக் கிளிக் செய்யவும்
Step 4. பணியாளர் மைய சேவைகளில் (Employee Centric Services) சொடுக்கவும்
Step 5. பாஸ்புக் (View Passbook) தெரிவை தேர்ந்தெடுக்கவும்  
STEP  6. உங்கள் UAN எண்ணை உள்ளிடவும்
STEP  7. கடவுச்சொல்லை (password) உள்ளிடவும்
STEP  8. உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிடவும்
உங்கள் EPF கணக்கு இருப்பை தெரிந்துக் கொள்ளவும்  

Also Read | Mobility Card இருந்தால் போதும் இனி Debit / Credit Card தேவையில்லை 

ஆன்லைனில் EPF கணக்கு நிலுவைகளை எவ்வாறு சரிபார்க்கலாம்:
STEP  1. epfindia.gov.in இல் உள்நுழையவும்
STEP  2. உங்கள் UAN எண்ணைத் தட்டச்சு செய்யவும்
STEP  3. உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்
STEP  4. சரிபார்ப்புக் குறியீடு captcha code-ஐ படித்துப் பார்த்து தட்டச்சு செய்யவும்
STEP  5. இ-பாஸ்புக்-இல் (e-Passbook) கிளிக் செய்யவும்
ஒரு புதிய பக்கம் திறக்கும், மேலும் உங்கள் EPF கணக்கு இருப்பு தெரியும். உங்கள் உறுப்பினர் ஐடியை சரி பார்த்துக் கொள்ளவும்

Also Read | IRCTCயின் புதிய வலைதளத்தின் நவீன அம்சங்கள் என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News