இனி இந்த நிறுவனங்களின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்க தடை!

Goqii Technologies நிறுவனத்தின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!!

Updated: Jun 1, 2019, 11:08 AM IST
இனி இந்த நிறுவனங்களின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்க தடை!

Goqii Technologies நிறுவனத்தின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!!

கடந்த சில வருடங்களில் ஆன்லைன் வர்த்தகம் என்பது இந்தியாவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அனைவராலும் அடையாளம் காணும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இருப்பினும் இன்னும் தங்களை முழுவீச்சில் செயல்படவிடாமல் தடுக்கும் ஒரு விஷயம் இந்தியாவில் உள்ளது என்று தெரிவிக்கின்றன இந்த நிறுவனங்கள்.

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ளவும், போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலும் சலுகைகளை வாரி வவழங்கி வருகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் அனைத்து நிறுவனத்தின் பொருட்களும் கிடைக்கும். இந்நிலையில், Goqii Technologies நிறுவனத்தின் பொருட்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்த தனியார் நிறுவனமானது அதிக சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக இந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை சிவில் நீதிமன்றம் Goqii Technologies நிறுவனத்தின் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வால் மார்ட்டிலும் இந்த பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்த நிறுவனம் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.