அன்பே வாழ்க்கை: நிறைய கொடுத்தவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்....!!

வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்; நெருக்கடி நிலைக்கு தள்ளாதீர்கள். தனிமை வாழ்க்கை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார் ஆசிரியர் தயாசங்கர் மிஸ்ரா.

Dayashankar Mishra தயாசங்கர் மிஸ்ரா | Updated: Jul 12, 2018, 01:34 PM IST
அன்பே வாழ்க்கை: நிறைய கொடுத்தவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்....!!
Zee News Tamil

'நேரம் தவிர வேறு எதையும் கேளுங்கள், அம்மா!' அது மட்டும் இல்லை. வங்கி கணக்கில் பணம் போட்டுவிட்டேன். உங்களை பார்க்க அடுத்த வருடம் தான் வரமுடியும். இந்த வருடம் எங்கள் குழந்தைகளுடன் நாங்கள் பதினைந்து நாட்களுக்கு ஐரோப்பியாவிற்கு போகிறோம் எனக் கூறினார்.

இதைக்கேட்ட அம்மாவின் குரலில், வேதனையின் வலியும், கோபமும் சேர்ந்து வந்தது. "மூன்று ஆண்டுகள் கழிந்தன, மும்பையிலிருந்து இந்தூர் வரை வர நேரம் இல்லை. ஆனால் ஐரோப்பியா செல்ல நேரம் இருக்கிறது. ஆனால் நாங்கள் உனக்காக நேரம் எங்களிடம் இல்லை என்று எப்பொழுதும் கூறவில்லை. உங்கள் தந்தையின் ஓய்வூதியம் போதும். உன் பணம் எங்களுக்கு தேவை இல்லை. ஆமாம், அது நிச்சயமாக தேவையில்லை! தயவு செய்து! பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்..!!

டியர் வாழ்க்கை: குடும்பம் மட்டுமா பெண்களின் வாழ்க்கை?

கதை இங்கே முடிவுக்கு வரவில்லை மகன் இறுதியாக ஐரோப்பியா செல்ல முடியவில்லை. ஏனென்றால், அவரது தாயின் விருப்பப்படி, அனைத்து சொத்துகளும் அவருடைய ஒரே மகனுக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தூர் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

சில காலத்திற்கு முன்னர், இத்தகைய சம்பவங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் முக்கியமாக வெளியிடப்பட்டன. ஆனால் இங்கே ஆண்டுகள் செல்ல செல்ல கதை மாறிவிட்டது. இந்தூர், மும்பை, கொல்கத்தா, ராஞ்சி, லக்னோ, சென்னை உட்பட இந்தியாவில் முக்கிய நகரங்களில் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது.

தற்போது வயதானவர்களை குடும்பத்தில் இருந்து அகற்றுவது சாதாரணமாகி வருகிறது. ஊடகங்களில், அந்த விஷயங்கள் பிரம்மாண்டமானவை, முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சாதாரண விஷயங்கள் அல்ல என்று செய்தி ஊடகங்களுக்கு மட்டுமே. ஆனால் நமக்கு இவை சாதாரணமானவை.

எல்லா இடங்களிலும் வயதானவர்களை குடும்பத்தில் இருந்து வெளியேற்றும் போது உணர்ச்சி முடிவடைகிறது. ஆனால் குழந்தை பருவத்தில் தமது தாயின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வளர்ந்த நாம், எவ்வளவு எளிதாக அவர்களை தவறவிடுகிறோம்

மேலே சொன்ன இந்தூர் கதை... ஏறக்குறைய அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது என்பது வேதனைக்குரிய விசியம். ஒருபுறம், சகோதரர்களுக்கு இடையில் தாய்-தந்தை யார் பர்த்துக் கொள்ளுவர்கள் என்ற பாகுபாடு, மறுபுறம், வயதான மாமியாரை வீட்டில் தங்கவைக்க ஆர்வம் காட்டுவதில்லை. இவை அனைத்தையும் மீறி சொந்த மகளே தன் தாயை நிராகரிப்பது என்பது பெரும் வேதனை.

அன்புள்ள வாழ்க்கையே: மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது!

இந்த பத்தி சரியான புரிதலை ஏற்படுத்துவது மிக முக்கியம். இதுவும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் சம்பவமே. இங்கு பெண்களின் பங்கு பற்றி ஒரு சிறப்பு அவசரநிலை உள்ளது. ஏன் பெண்களே பெண்களுக்கு அடைக்கலம் தருவதில் முரண்பாடு ஏற்படுகிறது என்பதை குறித்து ஆராயா வேண்டியது மிக முக்கியம்.

நான் ஒரு சிறு கதை பகிர்ந்துகொள்கிறேன்...

கணவன் வீட்டின் கதவு தட்டிகிறார். கதவு திறந்தவுடன். கணவன் கையில் இருக்கும் பொருட்களை பார்த்துவிட்டும், மனைவி கேட்கிறாள் ஹே! உங்களுடன் யார் வந்து இருக்கிறார்? கணவர் தானாக முன்வந்து, "அம்மா வந்துருக்கிறார்" அவருக்கு உடம்பு சரியில்லை. உனது மூத்த சகோதரர் விருந்தாவன் என்ற இடத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் நான் மதுராவிலிருந்து வீடு திரும்பும் போது, ஆசிரமத்தில் அம்மாவை பார்த்தேன். உடம்பு சரியில்லாததால் அம்மா அங்கே தங்க முடியாது. அதனால் அம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்தேன்' எனக்கூறி முடிப்பதற்க்குள், குறுக்கிட்டு மனைவி கூறினால், 

"ஏன் இங்கே கூட்டிக்கொண்டு வந்தீர்கள். என்னுடைய மற்ற சகோதரர்கள் வீட்டில் விட வேண்டியது தானே, ஏற்கனவே நாம கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். நம்ம வீடோ சிறியது. இதெல்லாம் எங்க அம்மாவுக்கு ஏன் புரியவில்லை. அவர்களுக்கு வெட்கம் என்பது இல்லயா..?" எனக் கோவப்பட்ட மனைவியை பார்த்து, கொஞ்சம் அமைதியாக இரு... உங்க அம்மா உள்ளே வராங்க எனக் கூறினான்.  

அம்மாவை பார்த்ததும்... மகளின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவர் சொன்னார், அம்மா நீங்களா? ஏன் நீங்க வருவீங்க என்று முன்னரே சொல்லவில்லை. அம்மா கவலைப்படாதீங்க... உங்கள் மகள் நான் இருக்கும் போது நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

ஆனால் அம்மா நீண்ட நேரம் தனியாக வெளியில் நின்றுக்கொண்டு இருந்த அம்மா சொன்னாள்... 'நீ எப்படி மிகவும் கடுமையாக மாறினாய்? அம்மா... அம்மா தானே. உங்க அண்ணிகள் மாதிரி நீ எப்படி மாறினாய்? எனக் கூறி நீண்ட நேரம் அழுதுக்கொண்டே இருந்தார். அழுதுக்கொண்டு இருக்கும் அம்மாவை சமாதனம் செய்ய முயற்சித்தாள் மகள். நான் கூறியது அனைத்தும் உங்களை பற்றி அல்ல.. நீங்கள் எனது அம்மா...!! 

சிறுகதை முடிவடைந்தது. 

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இன்றைய முதியவர்கள் தான் ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்தார். இளமையில் இருந்து தான் முதுமை வரும். இது இயற்கையின் விதி. இது பாகுபாடு இல்லாமல் அனைத்து பொருந்தும்... நினைவில் கொள்க!!

நன்றி: திரு. தயா சங்கர் (ஜீ நியூஸ் இந்தி டிஜிட்டல் ஆசிரியர்)

மொழி பெயர்ப்பு: சிவா முருகேசன் (ஜீ நியூஸ் தமிழ்)

ட்விட்டர்: https://twitter.com/dayashankarmi

முகநூல்: https://www.facebook.com/dayashankar.mishra.54