இனி உங்களின் வீடு தேடிவரும் இந்த 40 சேவைகள் -கெஜ்ரிவால்...

இன்றுமுதல் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் ஆம் ஆத்மி கட்சியின் புதிய திட்டம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2018, 11:57 AM IST
இனி உங்களின் வீடு தேடிவரும் இந்த 40 சேவைகள் -கெஜ்ரிவால்... title=

இன்றுமுதல் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் ஆம் ஆத்மி கட்சியின் புதிய திட்டம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக மீண்டும் ஒரு நல்ல முயற்சியை மேற்கொள்ள உள்ளது. இதுவரை நாட்டில் யாரும் மேற்கொள்ளாத இந்த நல்ல முயற்ச்சியை முதல் முறையாக ஆம் ஆத்மி அரசு செயல்படுத்துகிறது. 

அதாவது பிறப்பு, இறப்பு, சாதி, திருமணச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்பட 40 வகை சேவைகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், கூடுதலாக 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறிய அவர், இத்திட்டத்தை துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜால் தடுத்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த திட்டத்திற்கு மொபைல் சஹாயக் (Mobile Sahayaks) என்று பெயர் வைக்கபட்டு உள்ளது. அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது என்று, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதையடுத்து வீட்டுக்கே வந்து சேவையை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஊழலுக்கு இது முடிவு கட்டுவதுடன்,  அரசு நிர்வாகத்தை துரிதகதியில் செயல்பட வைக்கும் என்றும் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் மூலம் மக்களுக்கு பலமணி நேரம் மிச்சமாகும். லஞ்சம் ஒழிக்கப்படும். அதிகாரிகள் வீட்டுக்கே வந்து ஆவணங்கள் சரிபார்ப்பது, கைரேகை எடுப்பது, டிஜிட்டல் முறையில் புகைப்படம் எடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். 

இந்த திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில், நாடு முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றும் டெல்லி முதல்வர்  தெரிவித்துள்ளார்...!

 

Trending News