அகஸ்தியர் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் தன்யா சனல்.....

கேரள மாநிலம் அகஸ்தியர் கூடம் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் தன்யா சனல்.....

Last Updated : Jan 16, 2019, 11:26 AM IST
அகஸ்தியர் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் தன்யா சனல்..... title=

கேரள மாநிலம் அகஸ்தியர் கூடம் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் தன்யா சனல்.....

மேற்கு தொடர்ச்சி மலையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறாது அகத்தியர் மலை. அந்த மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது அகத்திய முனிவருக்கான சிறு கோவில் ஒன்று. கனி என்ற பழங்குடி இனத்தவர்களும் ஆண்களும் மட்டும் வழிபடும் தலமாக இன்று வரை இருக்கிறது இந்த அகத்தியர் கோவில். தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் 41 நாட்கள் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த மழைக்கு நாள் ஒன்றிற்கு 100 பக்தர்கள் வீதம் 47 நாட்களுக்கு 4700 பேர் இந்த கோவிலில் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த வருடம் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வந்த இரண்டு பெண்கள் அமைப்பு, இந்த அகஸ்திய கூடத்திற்கு பெண்களின் வழிபாட்டிற்கு அனுமதி வேண்டி கோரிக்கை மனுக்கள் வைக்கப்பட்டன. மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, அனு சிவராமன் பெண்களின் வழிபாட்டிற்கு உத்தரவிட்டு தீர்ப்பினை வழங்கினார்.

இந்நிலையில், கேரள மாநிலம் அகஸ்தியர் கூடம் மலைச்சிகரத்தை எட்டிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் தன்யா சனல். பாதுகாப்புத் துறை அதிகாரியான தன்யா கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து 100 மலையேறும் வீரர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டார். பெண்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியில் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற அவர் கடுமையான மலையேற்றத்தை கடந்து நேற்றிரவு மலைச்சிகரத்தை எட்டினார்.  

 

Trending News