இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த நிதியாண்டில் 12.17 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தி பீகார், ஜார்கண்ட் மாநிலத்தவர்களில் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பீகார், ஜார்கண்ட் மாநிலத்தில் 2017 - 2018 -ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தவர்கள் விவரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். அதில் 2017 - 2018 ஆம் நிதியாண்டுக்கு தோனி மொத்தம் ரூபாய் 12 கோடி 17 லட்சம் ரூபாய் வருமான வரி கட்டியுள்ளதாக கூறியுள்ளனர். இதன்மூலம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தவர்களில் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
கடந்த 2013-14-ம் நிதியாண்டிலும் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை தோனி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.