ராகு தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: அதிலிருந்து விடுபட எளிய வழிகள்

நிழல் கிரகங்களாய் இருந்தால், வாழ்க்கைக்கு இருளூட்டுவார்கள் என்று அஞ்ச வேண்டாம். என்றும் தொடரும் நிழலாய் வாழ்க்கைக்கு ஒளியூட்டுவார் ராகு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2022, 09:11 PM IST
  • என்றும் தொடரும் நிழலாய் வாழ்க்கைக்கு ஒளியூட்டுவார் ராகு
  • ராகு தோஷம் பற்றிய கவலை அநாவசியம்
  • ராகு தோஷ பரிகாரங்கள் எளியவை
ராகு தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: அதிலிருந்து விடுபட எளிய வழிகள் title=

ராகு தோஷ பரிகாரம்: ஜாதகத்தில் ராகு தோஷம் இருக்கும்போது திருமணம் தாமதம் ஆகலாம். அதை சமாளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவரது ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் அசுப ஸ்தானத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். வாழ்க்கையில் நிலையற்ற தன்மை ஏற்படும். அதேபோல் ஜாதகத்தில் இருக்கும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது கஷ்டங்களை கொடுப்பார்கள் என்று கூறுவார்கள்.

இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசுப ஸ்தானத்தில் இருந்தால், ஒரு நபரின் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் நிழல் கிரகத்தின் சாயல் பட்டால், வேலையும் கெடத் தொடங்குகிறது. ஆனால், சில சமயங்களில், சுபத்தையும் கொடுப்பார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது இடையே சுப, அசுப கிரகங்கள் இருப்பதால், காலசர்ப்ப தோஷம் ஏற்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால் ஒரு நபரின் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன.

மேலும் படிக்க | Zodiac Nature: மறப்போம் மன்னிப்போம் மன்னிப்பு கேட்போம் கொள்கை கொண்ட 3 ராசிகள் 

அதே நேரத்தில், ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலவீனமான நிலையில் இருந்தாலோ அல்லது திருமண வீட்டில் அமர்ந்திருந்தாலோ, திருமணம் தாமதமாகத் தொடங்குகிறது. இரவில் நிம்மதியற்ற தூக்கத்திற்கும் ராகுவே காரணம் என்றும் சொல்வார்கள்.

ராகு தோஷத்தைப் போக்க சில பரிகாரங்களைச் செய்யலாம். இது பெரும்பான்மையானவர்களுக்கு பலனளித்துள்ளது.

ராகு தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்
ஜோதிட சாஸ்திரப்படி யாருடைய ஜாதகத்திலும் ராகுவின் தோஷம் நீங்க, சிவபெருமானையும், விஷ்ணுவையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவற்றின் பாதிப்புகள் குறையும்.

மேலும், திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கருப்பட்டியை தண்ணீரில் கலந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் ராகுவின் தாக்கங்கள் குறையும்.

ஜாதகத்தில் ராகு தோஷம் ஏற்பட்டால், ராகு மந்திரம் ஓம் ப்ராம் ப்ரைன் ப்ரௌன் ச: ராஹவே நம என்று தொடர்ந்து ஜபிக்க வேண்டும். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் ராகு தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க | ராகு கிரகம் கண்டு அஞ்ச வேண்டாம்: இவர்களின் வாழ்வை பிரகாசிக்க வைப்பார் ராகு

ராகு தோஷம் நீங்க, தினமும் குஷத்தை தண்ணீரில் போட்டு குளிப்பது நன்மை தரும். ராகு தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இனிப்புப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

வியாழன் அன்று மகாவிஷ்ணுவை வழிபட்டால் ராகுவின் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஓம் நம சிவாய மற்றும் மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பது ராகு-கேது தோஷத்தை போக்க உதவுகிறது. ராகு தோஷம் நீங்க ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | KGF நாயகன் யஷ் உண்ணும் உணவுகள் இவைதான்: ஜாலியாக அழகாகும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News