Dowry: வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் மாநில ஆளுநர்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான். வரதட்சணை கொடுப்பதற்கும், வாங்குவதற்கும் எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று உண்ணாவிரதம் தொடங்கினார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2021, 01:27 PM IST
  • வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் மாநில ஆளுநர்
  • வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்பதை உணர்த்த உண்ணாவிரதம்
  • சமூகக் கொடுமைக்கு எதிராக மாநில ஆளுநர் உண்ணாவிரதம் இருக்கும் அதிசயம்
Dowry: வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் மாநில ஆளுநர் title=

திருவனந்தபுரம்: பலவிதமான போராட்டங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் மாநில ஆளுநர் ஒருவர் நடத்தும் இந்த போராட்டம் இதுவரை யாரும் நடத்தாதது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமை ஒன்றுக்கு எதிராக மாநில ஆளுநர் ஒருவர் உண்ணாவிரதம் இருப்பது என்பது ஆச்சரியமான ஒன்று.

இந்த ஆச்சரியத்திற்குரிய மனிதர், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான். வரதட்சணை கொடுப்பதற்கும், வாங்குவதற்கும் எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (ஜூலை 14, 2021, புதன்கிழமை) உண்ணாவிரதம் தொடங்கினார். 

வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் உண்ணாவிரதத்தை, திருவனந்தபுரத்தில் தைகாட் காந்தி பவனில் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. 

Also Read | Complete Lockdown: கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு

ஆளுநர் ஆரிப் முகமது கான், இன்று காலை 8 மணி முதல் ராஜ் பவனில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் ஆளுநர், இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை காந்தி பவனில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துக் கொள்வார்.

முன்னதாக செவ்வாயன்று பேசிய கேரள ஆளுநர், கல்வியறிவு மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் என பல பெருமைமிக்க சிறப்பம்சங்களைக் கொண்ட கேரள மாநிலம் உலக அளவில் பாராட்டு பெற்றது. ஆனால் தற்போது நம் மாநிலத்தில் வரதட்சணை அச்சுறுத்தலால் அவமானம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

”திருமணத்திற்கு வரதட்சணை பெறும் எந்தவொரு இளைஞனும் தனது (education) தனது நாட்டையும் இழிவுபடுத்துவதாகவும், பெண்மையை அவமதிப்பதாகவும் மகாத்மா காந்தி (Mahatma Gandhi) கூறியுள்ளார்” என்று கேரள ஆளுநர் கூறினார். கேரள அரசின்` ஸ்த்ரீபக்ஷ கேரளம் ’Sthreepaksha Keralam’ முன்முயற்சியின் மூலமாக பெண்களின் சுயமரியாதையை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுப்போம் என்று ஆளுநர் தெரிவித்தார்.

Also Read | PMGKAY: இலவச உணவுத் திட்டத்தில் 15 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம்
 
"வரதட்சணை கொடுப்பதும் பெறுவதும் கிரிமினல் குற்றங்களாகும், இதில் சம்பந்தப்பட்ட்வர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும். வரதட்சனை (dowry) என்பது கேரளாவின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த பெண்களின் கவுரவத்திற்கு கடுமையான அநீதி மற்றும் அவமதிப்பு செய்வதற்கு ஒப்பாகும் என்று கேரள மாநில ஆளுநர் தெரிவித்தார்.

பெண்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது வேதங்களிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், சமூகத்தை உன்னதமான இடத்திற்கு உயர்த்தும் லட்சியத்தின் அடிப்படை பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை" என்று அவர் கூறினார். திருமணத்தில் வரதட்சணை தொடர்பான விஷயங்கள் வந்தால், அதைதைரியமாக வெளிப்படுத்த முன்வருமாறு இளைஞர்களையும் கேரள ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதியை (social welfare) உறுதி செய்வதற்குமான உரிய வழி, ’எங்களுக்கு வரதட்சணை தேவையில்லை’ என்ற உறுதிமொழியை இளைஞர்கள் எடுப்பதே என்று கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கேட்டுக்கொண்டார்.

Also Read | Prashant Kishor: பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் வியூகம் தொடங்கிவிட்டதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News