மக்கள் பலரும் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவதிலும், 5ஜி நெட்வொர்க் சேவையை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனர்கள் தனது 5ஜி சேவையை படிப்படியாக பல நகரங்களுக்கு விரிவுபடுத்தும் சேவையை தொடங்கியிருக்கிறது. மக்கள் பலரும் தங்களுக்கு எப்போது இந்த சேவை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர், டிசம்பர் 2023ம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது, அதேபோல ஏர்டெல் நிறுவனமும் மார்ச் 2024ம் ஆண்டிற்க்குள் நாடு முழுவது 5ஜி சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பலர் அவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் 4ஜி ஸ்மார்ட்போன்களை விட்டுவிட்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மேலும் படிக்க | செப்டம்பரில் மட்டும் 26 லட்சம் அக்கவுண்ட்ஸ் ப்ளாக் - வாட்ஸ் அப் வெளியிட்ட தகவல்
4ஜி போன்கள் நன்றாக வேலை செய்தாலும் 5ஜி மோகத்தின் காரணமாக பலரும் 5ஜி போன்களை பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். என்னதான் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டாலும், பல ஆண்டுகளாக 4ஜி போன்ற பொதுவான நெட்வொர்க்கில் இருந்து விலகி இருக்கிறது. நாடு முழுவதும் 5ஜி யை விரிவுபடுத்த பல ஆண்டுகள் ஆகும் அதனால் மக்கள் அவசரமாக 5ஜி போன்களை வாங்க வேண்டியதில்லை, ஏற்கனவே 5G அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் கூட ஒரு சில தளங்கள் மட்டுமே செயல்படுகின்றன. 5ஜி-ன் பெரும்பாலான பயன்பாடுகள் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும், அதனால் தற்போது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி நெட்வொர்க்குகள் போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
5ஜி ஸ்மார்ட்போன்களின் மோகத்தில் வில வேண்டாம் என்றும், ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கும் 4ஜி போன் நன்றாக வேலை செய்தால் அதையே பயன்படுத்துங்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய 4ஜி போன் சேதமடைந்தாலோ அல்லது பழையதாகிவிட்டாலோ அதை மாற்ற வேண்டிய பட்சத்தில் நீங்கள் 5ஜி போன்களை வாங்கலாம் மற்றபடி 5ஜி வலையில் விழுக வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. பல புதிய 5ஜி போன்கள் சந்தையில் களமிறக்கப்பட்டாலும், பல 4ஜி போன்கள் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் புதிதாக வாங்கும் 5ஜி ஸ்மார்ட்போன் ஏர்டெல் மற்றும் ஜியோவின் 5ஜி நெட்வொர்க்குகளை ஆதரிக்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதால் 5ஜி போன் வாங்குவதில் அவசரமா காட்ட வேண்டாம்.
மேலும் படிக்க | ஏர்டெல் பம்பர் ஆஃபர்... நெட்ஃபிலிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ