கொரோனா வந்தவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஆண்குறியில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என துருக்கியில் ஆய்வில் தகவல்

Last Updated : Apr 1, 2022, 04:26 PM IST
  • கொரோனா வந்தால் ஆண்மைக் குறைவு
  • துருக்கியில் நடைபெற்ற ஆய்வில் தகவல்
  • மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக தகவல்
கொரோனா வந்தவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம் title=

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வருவதற்குள் படாதபாடு படுகின்றனர். ஒருவழியாக பிழைத்து வந்தாலும் இருதயம் பாதிக்கப்படலாம், கல்லீரல் பாதிக்கப்படலாம் என ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களாக தெரிவித்து வருகின்றனர். இது போதாது என தடுப்பூசியினாலும் இணை நோய்கள் வரலாம் என்று வதந்தி பரப்பப்படுகிறது.

Erectile Dysfunction

இந்த நிலையில் துருக்கி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய் ஆண் குறியில் உள்ள ரத்த நாளங்களின் செயல்பாடை குறைக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பெருந்தொற்று காலத்தினால் மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதன் காரணமாகவும் ஆண்மைக் குறைவு ஏற்படும் என ஆய்வு கூறுகிறது.

மேலும் படிக்க | ஏப்ரல்-1 முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுவது ஏன்

துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகள் மீது சோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது கொரோனாவில் இருந்து மீண்ட குரங்கிற்கு 14 நாட்களில் நுரையீரல் குணமடைந்துவிடுவதாகவும் அதற்கு பின்னர்தான் விரைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வுத் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியடையும் வகையில் இருந்தாலும் இவை அனைத்துமே முதற்கட்ட ஆய்வுகள்தான். சில ஆண்டுகளுக்கு பின் பாதிக்கப்பட்ட மக்களை ஆய்வு செய்வதன் மூலம்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

Erectile Dysfunction

மேலும் படிக்க | Balloon Lover காதலில் பலவகை ஆனால் இது புதுவகை பலூன் காதல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News