உங்களுக்கு அறியப்படாத எண்களிலிருந்து காப்பீட்டுக் கொள்கையைப் பற்றி தொலைபேசி அழைப்புகள் வருகிறதா? தள்ளுபடி சலுகைகளைப் பற்றிய விவரங்களைப் பெறுகிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுகாதார காப்பீட்டை விற்பனை செய்யும் பெயரில், சிகிச்சைக்கு தள்ளுபடி வழங்குவதாகக் கூறி வலை வீசும் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான IRDAI மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில சட்டவிரோத நிறுவனங்கள் சிகிச்சை அல்லது சோதனை செலவினங்களுக்கான தள்ளுபடியுடன் சுகாதாரக் கொள்கைகளை (Health Policy) விற்பனை செய்கின்றன என்பது தெரிய வந்துள்ளது என்று IRDAI தெரிவித்துள்ளது. IRDAI அல்லது அவற்றின் முகவர்களுடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே காப்பீட்டு தயாரிப்புகளை விற்க முடியும் என்று கட்டுப்பாட்டாளரான IRDAI பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ALSO READ: Health Insurance-ன் வகைகளை இனி Color Coding மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்
IRDAI –ன் படி, சட்டவிரோத நபர்கள் அல்லது நிறுவனங்களிலிருந்து இதுபோன்ற சேவைகளைப் பெறுபவர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் அவ்வாறு செய்கிறார்கள். IRDAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் (Insurance Companies) பட்டியல் அதன் இணையதளத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனுடன் தொடர்புடைய காப்பீட்டு திட்டத்தின் செல்லுபடி காலத்தை IRDAI அதிகரிக்கக்கூடும். COVID-19 தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்படும் வரை ‘கொரோனா கவச்’ (Corona Kavach) போன்ற சுகாதார காப்பீட்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்படலாம் என்று IRDAI தலைவர் சுபாஷ் சி. குந்தியா சமீபத்தில் தெரிவித்திருந்தார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சையில் உதவுவதற்காக இப்படி செய்யப்படும்.
இது மட்டுமல்லாமல், இந்த வைரஸிற்கான நிலையான பாலிசிகளைக் கொண்டு வருவதைப் பற்றியும் IRDAI யோசித்து வருகிறது. அத்தகைய பாலிசிகளை பாலிசிதாரர்கள் வாங்குவதும் எளிதாக இருக்கும். மேலும் அதற்காக அதிக அளவிலான பாலிசி ஆவணங்களும் தேவைப்படாது.
COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அனைத்து பொது மற்றும் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களும் (Insurance Companies) 2020 ஜூலை மாதம் கொரோனா கவச் கொள்கையை அறிமுகப்படுத்தின.
ALSO READ: Health Insurance எடுக்கப் போறீங்களா? என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR