ராசி மாறுகிறார் சூரியன்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இனி பிரகாசிக்கும், செல்வம் பெருகும்

Sun Transit: எந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சூரிய பகவான் உச்சத்தில் இருக்கிறாரோ, அவர்கள் ராசியில் சூரியனின் மாற்றத்தால் சாதகமான பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2022, 10:15 AM IST
ராசி மாறுகிறார் சூரியன்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இனி பிரகாசிக்கும், செல்வம் பெருகும் title=

மார்ச் 15 அன்று சூரிய சஞ்சாரம் நடக்க உள்ளது. சூரிய பகவான் கும்ப ராசியை விட்டு மீன ராசிக்கு செல்லவுள்ளார். மார்ச் 15, செவ்வாய்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்கு மீன ராசியில் சூரியனின் பிரவேசம் நடைபெற உள்ளது. தற்போது சூரிய பகவான் கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். சூரியன் கிரகங்களின் ராஜா என அழைக்கப்படுகிறார். 

சூரியனின் ராசி மாற்றத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சூரிய பகவான் உச்சத்தில் இருக்கிறாரோ, அவர்கள் ராசியில் சூரியனின் மாற்றத்தால் சாதகமான பலன்கள் ஏற்படும். சூரியன் எந்த ராசிகளில் பலவீனமாக இருக்கிறாரோ, அந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்கள் கிடைக்கும். சூரியன் உச்சமடைவதால், நலிவடைந்த துறையில் முன்னேற்றம் ஏற்படும், புகழ் அதிகரிக்கும், தந்தையுடன் சுமுகமான உறவுகள் இருக்கும். அரசியல் துறையில் பெரிய பதவி கிடைக்கும். சூரியனின் ராசி மாற்றத்தின் மூலம் தலைவிதி மாறக்கூடிய நான்கு ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

சூரியன் ராசி மாறுவதால் வரப்போகும் மாற்றங்கள் 
மேஷம்
மீனத்தில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும். மீன ராசிக்காரர்களுக்கு தாய் மூலம் பண ஆதாயம் கிடைக்கும். சொத்தில் முதலீடு செய்யலாம். சூரியனின் ராசி மாற்றத்தால், வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். வேலை மாற்றம் தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கக்கூடும். 

மேலும் படிக்க | குரு உதயத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்

கடகம்
சூரியனின் பெயர்ச்சி உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக, நீங்கள் வேலையில் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த மாற்றத்தின் போது எடுத்த வேலைகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சூரியனால் தைரியமும் பலமும் அதிகரிக்கும். மரியாதையும் கூடும்.

கன்னி 
சூரியன் ராசி மாறுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமான சூழ்நிலை ஏற்படும். தொழில் செய்பவர்கள், அதை மேலும் விரிவுபடுத்தலாம். வணிக விரிவாக்கத் திட்டத்தில் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இறக்குமதி-ஏற்றுமதி வணிகத்தில் வலுவான லாபத்தின் அறிகுறிகள் உள்ளன. நீங்கள் வாகனம் வாங்க விரும்பினால், அதை இப்போது வாங்கலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் மேசமான நிலையை சீர்படுத்த உதவும். சூரியனின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களின் பணமும் புகழும் அதிகரிக்கும். பதவி, கௌரவம் ஆகியவை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால், தொழிலில் முன்னேற்றம் மேலோங்கி இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலையைப் பற்றி நன்கு அறிந்த பிறகே முடிவு எடுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News