Good News: PF பணம் எடுப்பதில் பிரச்சனையா? இந்த Whatsapp helpline number மூலம் உதவி பெறலாம்

உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதில் சிக்கல் இருந்தால், நீங்கள் EPFO-விடம் வாட்ஸ்அப் மூலம் உதவி கேட்கலாம். EPFO அதன் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2021, 05:39 PM IST
  • EPFO தனது உறுப்பினர்களுக்கு எளிதான மற்றும் சிறந்த வசதிகளை வழங்குகிறது.
  • தொழிலாளர் அமைச்சகம் இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • EPFO இன் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையின் நன்மைகள் பல.
Good News: PF பணம் எடுப்பதில் பிரச்சனையா? இந்த Whatsapp helpline number மூலம் உதவி பெறலாம் title=

கொரோனா தொற்று பரவியுள்ள இந்த கடினமான காலகட்டத்தில் பணத்தின் தேவையை மனதில் வைத்து, பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு அமைப்பான EPFO ​​சிறப்பு வசதியை வழங்கியுள்ளது. உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதில் சிக்கல் இருந்தால், நீங்கள் EPFO-விடம் வாட்ஸ்அப் மூலம் உதவி கேட்கலாம். EPFO அதன் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது.

EPFO WhatsApp ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்துகிறது

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் பங்குதாரர்களின் புகார்களை உடனடியாகத் தீர்ப்பதற்காக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் (Whatsapp Helpline) சேவையைத் தொடங்கியுள்ளது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இபிஎஃப்ஒவின் புகார்களைத் தீர்ப்பதற்கான மற்ற மன்றங்களுடன் இந்த வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மன்றங்களில் EPFIGMS போர்டல் (EPFO இன் ஆன்லைன் புகார் தீர்வு போர்டல்), CPGRAMS, சமூக ஊடக தளம் (பேஸ்புக், ட்விட்டர்) மற்றும் 24 மணி நேர கால் சென்டர் ஆகியவை அடங்கும்.

அமைச்சகம் இதை கூறியது

தொழிலாளர் அமைச்சகம் (Labour Ministry) ஒரு அறிக்கையில், EPFO தனது உறுப்பினர்களுக்கு எளிதான மற்றும் சிறந்த வசதிகளை வழங்க வாட்ஸ்அப் அடிப்படையிலான ஹெல்ப்லைன் மற்றும் குறை தீர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவித்தது. இந்த வசதியின் தொடக்கத்துடன், கொரோனாவின் இந்த கடினமான காலகட்டத்தில் EPFO ​​உறுப்பினர்களுக்கு பல வசதிகள் கிடைக்கும்.

உங்கள் மண்டலத்தின் ஹெல்ப்லைன் எண்ணை இங்கே தெர்ந்து கொள்ளலாம்

epfo

ALSO READ: இந்த 5 வங்கிகளில் சேமிப்புக் கணக்கை திறக்கவும்; வட்டி விகிதம் 7 மடங்கு அதிகம்!

ஹெல்ப்லைன் எண் மூலம் நீங்கள் நேரடியாக பேசலாம்

EPFO இன் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையின் மூலம், PF பங்குதாரர்கள் EPFO ​​இன் பிராந்திய அலுவலகங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இப்போது EPFO ​​இன் அனைத்து 138 பிராந்திய அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

PF கணக்கு வைத்திருக்கும் நபர்கள், தங்கள் கணக்கு உள்ள பிராந்திய அலுவலகத்தின் ஹெல்ப்லைன் எண்ணில் வாட்ஸ்அப் (Whatsapp) செய்தி மூலம், EPFO தொடர்பான சேவைகள் குறித்த எந்தவொரு புகாரையும் பதிவு செய்யலாம். அனைத்து மண்டல அலுவலகங்களின் Whatsapp Helpline எண்களும் EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: Post Office வாடிக்கையாளர்களுக்கு good news: விரைவில் வரவுள்ளன அதிக வசதிகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News