இன்று GST நாள் விழா கொண்டாடுகிறது மத்திய அரசு!!

ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி இன்றுடன் ஓராண்டு நிறைவு!

Updated: Jul 1, 2018, 12:41 PM IST
இன்று GST நாள் விழா கொண்டாடுகிறது மத்திய அரசு!!

ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி இன்றுடன் ஓராண்டு நிறைவு!

உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் ஜி.எஸ்டி. 

வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. 

இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. நாள் விழா கொண்டாடியது!