மாம்பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

Mango: தற்போது கோடைகாலத்தில் பலரும் மாம்பழங்களை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். மாம்பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க எப்படி சேமித்து வைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2024, 07:14 AM IST
  • உடலுக்கு குளிர்ச்சி தரும் மாம்பழம்.
  • மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
  • கெட்டுப்போகாமல் தடுப்பது எப்படி?
மாம்பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? title=

Mango on Fridge: கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழங்கள் உடலுக்கு அதிக அளவு நன்மைகளை தருகிறது. இந்த சமயத்தில் மற்ற பழங்களை காட்டிலும் மாம்பழம் விற்பனை அதிகளவில் இருக்கும். மாம்பழத்தின் சுவையை எந்த ஜூஸ் நிறுவனங்களும் தர முடியாது. அதிலும் குறிப்பாக ஒரு சில மாம்பழ வகைகள் அதிக விலை கொண்டதாகவும் இருக்கும். மாம்பழ பிரியர்கள் ஆண்டு முழுவதும் இந்த சீசனுக்காக காத்திருந்து வாங்கி சாப்பிடுகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு சிலர் மாம்பழத்தை மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்து சாப்பிடுகின்றனர்.

மேலும் படிக்க | இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி... ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா?

ஆனால் இதில் உள்ள முக்கியமான பிரச்சனை என்னவென்றால் மாம்பழம் எளிதில் கெட்டுவிடும். எனவே அனைத்து மாம்பழங்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது என்பது முடியாத காரியம். இத்தகையை சூழ்நிலையில், மாம்பழங்களை சரியான முறையில் சேமித்து வைப்பது முக்கியம். இல்லை என்றால் மாம்பழங்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை சேமித்து வைப்பதற்கான சரியான வழியை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரது வீடுகளிலும் மாம்பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்க பிரிட்ஜில் வைப்பது வழக்கம். ஒருசில மாம்பழங்கள் காயாக இருக்கும் பட்சத்தில் இயற்கையான வெப்பத்தில் இருந்தால் நன்றாக பழுக்கும். இருப்பினும், மாம்பழங்களை எப்படி சேமிக்க வேண்டும் என்பது பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை.

மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைப்பது சரியா?

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழங்களை எப்போதும் பிரிட்ஜில் சேமிக்கக்கூடாது. இது மாம்பழத்தில் உள்ள சத்துக்களை கெடுத்துவிடுகிறது மற்றும் அதன் இயற்கையான சுவையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. எனவே மாம்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது. மாம்பழங்கள் பழுக்காமல் இருக்கும் சமயத்தில் பிரிட்ஜில் வைப்பது தவறில்லை என்றாலும், நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் இருக்கும் போது மாம்பழங்கள் சரியாக பழுக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. மாம்பழங்கள் நன்கு பழுக்க, அறை வெப்பநிலையில் அல்லது சற்று வெதுவெதுப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

மாம்பழத்தை சேமித்து வைக்க

கோடைக்காலத்தில் மாம்பழங்களை வெயிலில் வைக்க கூடாது. அதிக வெப்பம் சீக்கிரம் மாம்பழங்களை கெட்டு போக செய்யும். மாம்பழங்கள் நன்கு பழுத்ததும் சிறிது நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க தண்ணீரில் அல்லது பிரிட்ஜில் வைக்கலாம். பழுத்த மாம்பழங்களை 4-5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருக்க கூடாது. அதே சமயம் மற்ற காய்கறிகள் மற்றும் பழங்களுடன் மாம்பழத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் இது மற்ற காய்கறிகள் கெட்டுப்போக வழிவகை செய்யும். முடிந்தவரை சாப்பிடும் முன்பு சிறிது நேரம் மட்டும் மாம்பழங்களை பிரிட்ஜில் வைப்பது நல்லது.

மேலும் படிக்க | மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News