ஆன்லைன் மூலம் இலவசமாக கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி?

Credit Card: நீங்கள் சம்பளம் பெறும் தனிநபராக இருந்தாலும் சரி, சுயதொழில் செய்யும் தொழிலதிபராக இருந்தாலும், கிரெடிட் கார்ட் பெற குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது முக்கியம்.   

Written by - RK Spark | Last Updated : Dec 10, 2023, 03:02 PM IST
  • இலவச கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • நேரில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமில்லை.
  • குறிப்பிட்ட ஆவணங்கள் சமர்ப்பிப்பது முக்கியம்.
ஆன்லைன் மூலம் இலவசமாக கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி? title=

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, பண பரிவர்த்தனை செய்யும் போது நல்ல வெகுமதிகள் மற்றும் கேஷ்பேக்குகள் பெற முடியும். இருப்பினும், கிரெடிட் கார்டு பெற சில பொதுவான ஆவணங்கள் தேவைப்படுகிறது.  நீங்கள் வங்கிகளின் வாடிக்கையாளராக இருந்தால் எளிதாக கிரெடிட் கார்டு வாங்கலாம், அப்படி இல்லாத சமயத்தில் சில ஆவணங்கள் தேவைப்படுகிறது.  நீங்கள் கிரெடிட் கார்டை ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், விண்ணப்ப செயல்முறைக்கு தேவையான சில ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.  இந்த ஆவணங்கள் உங்கள் பெயர், ஊர் போன்ற பொதுவான தகவல்கள் உட்பட, உங்கள் நிதி நிலைக்கான ஆதாரத்தையும் வழங்குகின்றன. 

எனவே, ஆன்லைனில் கிரெடிட் கார்டை பெற தேவையான முக்கிய ஆவணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.  சரியான முறையில் வங்கி கணக்கை பராமரிப்பது முக்கியம்.  முன் வாங்கிய கடனை சரியான முறையில் கட்டுவது உட்பட, மினிமம் பேலன்ஸ் போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.  இந்த ஆவணங்கள் சரியான முறையில் இல்லை என்றால் எந்தவொரு கிரெடிட் கார்டு விண்ணப்பமும் ஆன்லைனில் அல்லது வேறு எந்த வழியிலும் நிராகரிக்கப்படும். 

மேலும் படிக்க | ITR தாக்கலில் மறைக்கக்கூடாத 6 விஷயங்கள்: மறைத்தால் வீடு தேடி வருமான வரி நோட்டீஸ் வரும்

கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க பொதுவாக தேவைப்படும் ஆவணங்கள்

அடையாளச் சான்று

ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் உரிமம் மாநில அரசால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும், இது ஒரு நபரை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கிறது. இதில் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படம் மற்றும் உரிமதாரரின் தகவல் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும். 

பான் கார்டு: நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்ட் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒரு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வருமான வரித் துறையால் ஒதுக்கப்படும் தனித்துவமான அடையாள அட்டையாகும்.  கிரெடிட் கார்டு விண்ணப்ப செயல்முறைக்கும் பான் கார்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு அடையாளச் சரிபார்ப்புக் கருவியாகச் செயல்படுகிறது. விண்ணப்பதாரரின் நம்பகத்தன்மை நிறுவுவதில் பான் கார்டு முக்கிய அங்கமாக செயல்படுகிறது.

பாஸ்போர்ட்: உங்கள் புகைப்படம் உட்பட தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணமாகும். இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று ஆகும்.  கிரெடிட் கார்டு விண்ணப்பங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களில் ஒன்ற பாஸ்போர்ட் ஆகும். 
இது விண்ணப்பதாரரின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.  

ஆதார் கார்ட்: ஆதார் இந்திய அரசால் வழங்கப்படும் தனித்துவமான அடையாள சான்று ஆகும். 12 இலக்க எண் கொண்ட இந்த அட்டையில் பயோமெட்ரிக் விவரங்கள் இணைந்து இருக்கும். கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க முக்கிய ஆவணம் ஆதார் அட்டை. இதுவும் விண்ணப்பதாரரின் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது.

வருமானம் தொடர்பான ஆவணங்கள்

பான் கார்ட் விண்ணப்பிக்க கடைசி மூன்று மாத சம்பளம் வாங்கிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்கள் உங்களின் வருமானம் மற்றும் இதர விவரங்களை கொண்டுள்ளது. மேலும் சிலர் கடைசி ஓர் ஆண்டு வருமான விவரங்களை கேட்கின்றனர்.  பதிவுச் சான்றிதழ் உட்பட உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங்களில் உங்கள் வணிக நிறுவனத்தின் சட்டப்பூர்வ இருப்பை நிரூபிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமான வரி அறிக்கைகள் (ஐடிஆர்) மற்றும் நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்தல் மிக முக்கியமானது. 

மேலும் படிக்க | Kisan Credit Card: குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன்! விவசாயிகளுக்கு முன்னுரிமை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News