Coconut Kitchen Hacks: தேங்காய் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தோசைக்கு சட்னி வைப்பதில் தொடங்கி, குழம்பில் அரைத்து ஊற்றுவது வரை பலவற்றிற்கு உதவுகிறது. தேங்காய்யை உடைத்த உடனே பயன்படுத்த வேண்டும் என்பதால், அதிகம் தேவைப்படும் போது மட்டுமே உடைக்கிறோம். ஒருசிலர் உடைத்த தேங்காய் கெட்டுப்போகாமல் இருக்க அதனை பிரிட்ஜில் வைப்பார்கள். ஒருசில சமயம் உடைக்காத தேங்காய் கூட கெட்டுப்போக அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற சமயங்களில் சமையல் பாதியில் நிற்கும். எனவே தேங்காயை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும் தந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உடைக்காத தேங்காயை நீண்ட நாட்கள் புதியதாக வைத்திருக்க, தேங்காயை டம்ளர் அல்லது கிண்ணத்தில் அதன் மூன்று புள்ளிகள் உள்ளே இருக்கும் படி கவுத்தி வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் புதிதாக இருக்கும். முடிந்தவரை ஈரப்பதமான சூழ்நிலையில் வைத்து இருந்தாலும் கெட்டு போகாமல் இருக்கும்.
மேலும் படிக்க | ஒருவர் சாப்பிட்ட உணவை மற்றொருவர் சாப்பிட்டால் இத்தனை நோய்கள் பரவுமா? பகீர் தகவல்!!
தேங்காய் சமையலில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
உடைத்த தேங்காய்யை உடனே மிருதுவாக்கிகள், இனிப்பு உணவுகள், சாலடுகள், சட்னி, குழம்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. இவை உணவின் சுவையை அதிகப்படுத்தும். மேலும் ஈரப்பதமான தேங்காய் மென்மையாக இருக்கும். உடைத்து 2, 3 நாட்கள் ஆனா தேங்காய் சமையல் மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற சமயத்தில் தேங்காயின் சுவையில் பெரிய மாற்றம் இருக்காது என்பதால் தாராளமாக பயன்படுத்தலாம். தேங்காயை சேமிக்கும் அளவிற்கு அதன் தண்ணீரை சேமிப்பது கடினம். தேங்காய் உடைத்த உடனேயே அதன் தண்ணீரை குடிப்பது நல்லது, இல்லை என்றால் கெட்டுவிடும். 24 மணி நேரத்திற்கு மேல் சேமிக்க விரும்பினால் காற்று புகாத பாட்டில்களில் சேமிக்கலாம். இதன் மூலம் ஒரு வாரம் வரை உபயோகிக்க முடியும்.
தேங்காய்யை பிரிட்ஜில் வைக்கலாமா?
தேங்காய் தண்ணீரை ஐஸ் கியூப் வைக்கும் தட்டுகளில் சேமித்து வைக்கலாம். இவற்றை பிரிட்ஜில் உறையவைப்பதன் மூலம் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். இந்த சமயத்தில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. தேங்காய் அல்லது அதன் தண்ணீர் கெட்டு போவதை தவிர்க்க சுத்தமான, காற்று புகாத டப்பாக்களை பயன்படுத்துவது அவசியம். முடிந்தவரை நீண்ட நாட்கள் சேமிப்பதை தவிர்ப்பதும் நல்லது. உடைத்த தேங்காயை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் அப்படியே வைக்கலாம். அதற்கு மேல் தேங்காய் காய்ந்து போகாமல் இருக்க காற்று புகாத டப்பாவில் சேமிக்கலாம். 6 முதல் 8 மாதங்கள் வரையிலும் தேங்காய் துருவல் அல்லது உடைத்த தேங்காயை சேமித்து வைக்க முடியும். பிரிட்ஜில் உள்ள ஈரப்பதம் இவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பிரிட்ஜில் வைக்கும் முன்பு துணியால் சுத்தி வைப்பது நல்லது.
மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ