உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?

நம்மில் பலரை, பிறர் வெறும் வெத்து நினைத்திருப்பர். அவர்கள் மத்தியில் நாம் எப்படி வாழ வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 23, 2024, 04:39 PM IST
  • கெத்தாக வாழ டிப்ஸ்
  • மனதிற்கு உண்மையாக இருக்க வேண்டும்
  • வேறு என்ன செய்ய வேண்டும்?
உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி? title=

‘சூர்யவம்சம்’ படத்தில் வரும் சரத்குமார் போல, உங்களுக்கும் உங்களை வெத்து என கூறியவர்கள் மத்தியில் கெத்தாக வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தவறே இல்லை. நம்மை “நீயெல்லாம் ஒரு ஆளா..” என கேட்டவர்கள் “அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?” என பிறரிடம் கூற வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

உங்கள் மீதிருக்கும் நம்பிக்கை:

நமது தகுதியை பிறருக்கு நிரூபித்து காட்ட வேண்டும் என்ற அவசியமே இல்லை. யார் உங்களை பற்றி என்ன அவதூறு பரப்பினாலும், என்ன கிசுகிசு பேசினாலும், உங்களின் மனது உங்களுக்கு தெரியும் என்பதில் உறுதியாக இருங்கள். அவர் வந்து இதை சொல்ல வேண்டும், இவர் வந்து அதை சொல்ல வேண்டும் என்றெல்லாம் பிறரின் கருத்துகளை எதிர்பார்த்து காலத்தை வீணடிக்க கூடாது. பிறரின் கருத்துகள் உங்களை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எல்லைக்கோடு:

உங்கள் வாழ்வில், நெகடிவாக இருக்கும் நபர்களிடம், உங்களை கெட்ட வழியில் செல்ல உந்தச்செய்யும் நபர்களிடம் இருந்து நீங்கள் தள்ளியே இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் அருகில் நெருங்க நினைத்தாலும், அவர்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டை போட்டு, அதிலேயே அவர்களை வைத்திருங்கள். உங்களை பற்றி ஒருவர் விமர்சனம் தெரிவிக்கிறார் என்றால், அவர் உங்கள் நலன் விரும்பியாக மட்டுமே இருக்க வேண்டும். உங்களை சுற்றி, உங்கள் வெற்றியை பார்த்து பெருமை படும் நபர்களை மட்டும் வைத்திருங்கள்.

பிடித்த விஷயங்கள்:

உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுங்கள். பிடிக்காத வேலையை செய்தாலும், அதற்கு இடையில், உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போதுதான், வாழ்வு மகிழ்ச்சியாகும்.

மேலும் படிக்க | உங்கள் காதலருக்கு இந்த 4 குணங்கள் இருந்தால்... திருமணத்திற்கு ஓகே சொல்லாதீர்கள்

விடாமுயற்சி:

வாழ்வில் அனைவருக்கும் தடைகள் வருவதும், கூடவே இருப்பவர்கள் காலை வாரி விடுவதும் மிகவும் சகஜம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த தடை ஏற்பட்டாலும், அதை தகர்த்தெறிந்து மீண்டும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லுங்கள்.

Life

சின்ன வெற்றிகளை கொண்டாடுங்கள்:

உங்களது வெற்றி பெரிதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் அதை நீங்கள் முதலில் கொண்டாட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி, உங்கள் வெற்றிகளை நீங்கள் கொண்டாடும் போது உங்களுக்கே இன்னும் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கை உண்டாகும்.

நன்றி உணர்வு:

மனிதனின் மனம் “அது வேண்டும், இது வேண்டும்” என ஏதேனும் ஒன்றை தேடிக்கொண்டே இருக்கும். அந்த விஷயங்கள் உங்கள் கைக்கு கிடைக்க வேண்டும் என்றால் கிடைக்கும், கிடைக்க கூடாது என்றால் கிடைக்காது. எனவே, கிடைக்காத விஷயங்களை நினைத்து வருந்துவதை விட, இப்போது உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அதை நினைத்து நன்றியுடன் இருக்க வேண்டும்.

செயலில் காட்டுங்கள்..

உங்கள் வாழ்வில் என்ன நடக்கிறது, என்னென்ன முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை அவ்வப்போது பிறரிடம் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்கள் மனதில் ஒரு இலக்கு இருக்கிறது என்றால், அந்த இலக்கை நீங்கள் அடையும் வரை, பிறரிடம் சொல்லாமல் அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | நல்ல கணவரிடம் இருக்கும் 7 குணாதிசயங்கள்! உங்க கிட்ட இருக்கான்னு பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News