ஆட்டோமொபைல் துறையில் கடந்த 3 மாதத்தில் 2 லட்சம் பேர் வேலை இழப்பு!!

இந்திய ஆட்டோமொபைல் துறையில், கடந்த மூன்று மாதத்தில் இரண்டரை லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!

Last Updated : Aug 7, 2019, 05:46 PM IST
ஆட்டோமொபைல் துறையில் கடந்த 3 மாதத்தில் 2 லட்சம் பேர் வேலை இழப்பு!! title=

இந்திய ஆட்டோமொபைல் துறையில், கடந்த மூன்று மாதத்தில் இரண்டரை லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!

டெல்லி: ஆட்டோமொபைல் துறையில் கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 2,50,000 பேர் வேலையைவிட்டு நீக்கப்பட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த துறைகளில் ஒன்று ஆட்டோமொபைல் துறை இருந்தது. ஆயிரக்கணக்கில் இந்த துறையில் பலர் வேலை வாய்ப்பை பெற்றனர். இந்திய ஆட்டோமொபைல் துறை எனப்படும், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி துறை, கடந்த ஆண்டு முதலே, மோசமான பின்னடைவை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.

மாருதி சுசூகி, ஹோண்டா, டாடா, மஹிந்ரா உட்பட பல வாகன உற்பத்தி நிறுவனங்கள், வாரத்தில், சில நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாகவும், ஒப்பந்த ஊழியர்களுக்கான ஷிப்டுகளை குறைப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றிய 15 ஆயிரம் பேர் வேலையிழந்திருப்பதாகவும், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியில் ஈடுபடும் ஒரு லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

அதேபோல் அதிகப்படியான வரி விதிப்பும் இழப்பு ஏற்பட ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இதனால், தற்போது வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு இந்த நிறுவனங்கள் கோரிக்கை வைக்க உள்ளது. ஆனால் அதற்கு முன் இந்த நிறுவனங்களில் இருந்து மேலும் சில பணியாளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மேலும், ஆட்டோ மொபைல் துறையில், மிக முக்கிய பங்கு வகிக்கும், கார், பைக் டீலர்கள், ஏஜென்சிகளில் தான் வேலைவாய்ப்புகள் அதிகம் என்றும், இந்த வகையில், கார் டீலர்கள், ஏஜென்சிகளில் பணியாற்றி 2 லட்சம் பேர் வரையில் வேலையிழந்திருப்பதாகவும், தகவல் வெளியாகியிருக்கிறது. இவ்வாறு, இந்திய வாகன உற்பத்தி மற்றும் விற்பனை துறையில், வெறும் 3 மாதத்தில், இரண்டரை லட்சம் பேர் வேலையிழந்திருப்பது, தொழில் முனைவோர், மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

Trending News