மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயதில் நிறுத்தப்படுமா? போலிச் செய்தியா?

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயதில் நிறுத்தப்படுமா என்று கேட்டால், பராமரிப்பு உதவித்தொகையும் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2021, 10:35 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயதில் நிறுத்தப்படுமா?
  • ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு "பராமரிப்பு உதவித்தொகை" செலுத்தப்படுமா?
  • பராமரிப்பு உதவித்தொகைக்கும் அகவிலைப்படிக்கும் தொடர்பு உள்ளதா?
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயதில் நிறுத்தப்படுமா? போலிச் செய்தியா?

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயதில் நிறுத்தப்படும் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே, அது பற்றிய கருத்துக்கள் பரவலாக பகிரப்பட்டன.

பெங்கால் மொழியில் வெளியாகும் தினசரி செய்தித்தாள் ஒன்று செப்டம்பர் 13ம் தேதியன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில், ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகளின் ஓய்வூதியம் அவர்களது 70 முதல் 75 வயதில் நிறுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அது பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தது.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா உண்மை கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  
PIB Fact Check மேற்கொண்ட சோதனைகளில் அந்த செய்தி போலியானது என்று தெரியவந்தது. அதுமட்டுமல்ல, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு "பராமரிப்பு உதவித்தொகை" என்று ஒருமுறை செலுத்தப்படும் தொகையையும் வழங்கும் என்ற உண்மையும் தெரிய வந்தது.
Bartaman Patrika & https://t.co/dtMrEOYdpl have falsely reported that a proposal to stop the pension of Central Govt pensioners after the age of 70-75 years, is under consideration#PIBFactCheck

இந்த பராமரிப்பு உதவித்தொகையானது, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் தொகையில் 40 முதல் 60% வரை இருக்கும் என்றும், இது அகவிலைப்படிக்கு (DR) உட்பட்டதாக இருக்காது என்றும் தெரியவந்தது. 

உண்மைச் சரிபார்ப்பு சோதனைகள் போலி செய்தியை அடையாளம் கண்டறிந்து ஓய்வூதியதாரர்களின் கவலையை போக்கிவிட்டது.   
நிதி அமைச்சகம் மற்றும் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியர் நலத்துறை போன்ற ஒரு திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றும், அது போன்ற எந்தவித திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றும் பிஐபி உண்மை சோதனை மேலும் கூறியது.

Also Read | ஓய்வூதியதாரர்களுக்கு பம்பர் செய்தி, டி.ஆர்-ல் 356% அதிகரிப்பு

"பார்டமான் பத்திரிகை & http://babushahi.com 70-75 வயதுக்கு பிறகு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகமோ, பணியாளர் நலத்துறையோ அத்தகைய எந்த முன்மொழிவு பற்றி முன்மொழியவோ சிந்திக்கவோ இல்லை "என்று PIB Fact Check ட்வீட் செய்துள்ளது.

சிவில் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் குறித்த கொள்கையை மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் வயது தொடர்பாக அவ்வப்போது இப்படி செய்திகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மக்களவையில் அரசு விளக்கமளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | மருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News