மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 16% டிஏ ஹைக்.. அரியரும் கிடைக்கும், உத்தரவு வெளியானது!!

DA Hike News: டிஏ உயர்வு உத்தரவுக்குப் பிறகு, இந்த ஊழியர்களுக்கான புதிய டிஏ விகிதம் அடிப்படை ஊதியத்தில் 412 சதவீதமாக உயரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2023, 05:38 PM IST
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு 4 சதவிகிதம் இருக்கும் என தெரியவந்துள்ளது.
  • தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவிகித அகவிலப்படியை பெற்று வருகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 16% டிஏ ஹைக்.. அரியரும் கிடைக்கும், உத்தரவு வெளியானது!! title=

அகவிலைப்படி (டிஏ), அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு செய்தி: 5 ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்பு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதாக செலவினத் துறை (டிஓஇ) அறிவித்துள்ளது. அந்த ஊழியர்களின் அகவிலைப்படி 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 5 ஆவது ஊதியக் குழுவின் விதிமுறைகளின்படி, இந்த ஊழியர்கள் அடிப்படை ஊதியத்தில் 396 சதவீதத்தை அகவிலைப்படியாக பெற்று வந்தனர். 

இந்த டிஏ உயர்வு உத்தரவுக்குப் பிறகு, இந்த ஊழியர்களுக்கான புதிய டிஏ விகிதம் அடிப்படை ஊதியத்தில் 412 சதவீதமாக உயரும். இந்த ஊழியர்களுக்கான நல்ல செய்தி இத்துடன் முடிவடையவில்லை. ஜனவரி 1, 2023 முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி விகிதம் அமலுக்கு வருவதால், இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்புக்கான நிலுவைத் தொகையும் கிடைக்கும். 

அகவிலைப்படி உயர்வு செய்தி: முழு ஆர்டர், அறிவிப்பு

நிதி அமைச்சகத்தின் கீழ் செலவினத் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி: “... 01.01.2023 முதல் மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களைப் பொறுத்தமட்டில், முன் திருத்தப்பட்ட ஊதியத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் அகவிலைப்படி (டிஏ) விகிதம் 5வது மத்திய ஊதியக் குழுவின் படி, அடிப்படை ஊதியத்தின் 396% என்ற விகிதத்தில் இருந்து 412% ஆக உயர்த்தப்படும்.”

அகவிலைப்படி உயர்வு: முழு அறிவிப்பையும் இங்கே படிக்கலாம்:

பொருள்: மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு, 5 ஆவது ஊதியக் குழுவின்படி, முன் திருத்தப்பட்ட ஊதிய விகிதம்/தர ஊதியத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் அகவிலைப்படியின் திருத்தப்பட்ட விகிதங்கள்

கீழே கையொப்பமிடப்பட்டவர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் குறித்து OM. No. 1/3(2)/2008-E.(B) dated 12th October, 2022 -ஐ பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களைப் பொறுத்த வரையில் அகவிலைப்படி (DA) விகிதம், 5 ஆவது மத்திய ஊதியக் குழுவின்படி முன் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் ஊதியத்தைத் தொடர்ந்து பெறுபவர்களுக்கு. 01.01.2023 முதல் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தின் தற்போதைய விகிதமான 396% இலிருந்து 412% ஆக உயர்த்தப்படும்.

2. இந்த அமைச்சகத்தின் OM. No. 1(13)/97-E (B) dated 3 October, 1997 -ன் பாராக்கள் 3, 4 மற்றும் 5 இல் உள்ள ஏற்பாடுகள் இந்த உத்தரவுகளின் கீழ் அகவிலைப்படியை ஒழுங்குபடுத்தும் போது தொடர்ந்து பொருந்தும்.

3. இந்த அலுவலக குறிப்பாணையின் உள்ளடக்கங்கள், மத்திய அரசின் ஊதிய விகிதங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சகங்கள்/துறைகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படலாம்.

மேலும் படிக்க | DA Hike: மோசமான சூழலிலும் அகவிலைப்படியை உயர்த்திய அரசு... கொண்டாட்டத்தின் மின் ஊழியர்கள்!

அகவிலைப்படி உயர்வு: டிஏ, டிஆர் உயர்வு செய்தி

6 ஆவது மத்திய ஊதியக் குழுவின் படி சம்பளம் பெறும் மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதாக செலவினத் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்த ஊழியர்களுக்கான டிஏ விகிதம் 212 சதவீதத்தில் இருந்து 221 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜனவரி 1, 2023 முதல் இந்த அதிகரிப்பின் நிலுவைத் தொகை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

7 ஆவது ஊதியக் குழு: ஜூலையில் அகவிலைப்படி உயர்வு  

மேலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு 4 சதவிகிதம் இருக்கும் என தெரியவந்துள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவிகித அகவிலப்படியை பெற்று வருகிறார்கள். ஜூலை மாதம் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டால் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயரும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை டிஏ உயர்வு வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்: சுடச்சுட சூப்பர் செய்தி...ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News