முதலையின் பல்லை விட ஆமை ஓடு வலிமையானது?.. இதோ வீடியோ ஆதாரம்!!

தன்னை சாப்பிட நினைக்கும் முதலையிடமிருந்து புத்திசாலிதானமாக தப்பியோடிய ஆமையின் வீடியோ வைரல்!!

Last Updated : Sep 16, 2020, 01:29 PM IST
முதலையின் பல்லை விட ஆமை ஓடு வலிமையானது?.. இதோ வீடியோ ஆதாரம்!! title=

தன்னை சாப்பிட நினைக்கும் முதலையிடமிருந்து புத்திசாலிதானமாக தப்பியோடிய ஆமையின் வீடியோ வைரல்!!

ஆமைகள் மிகவும் வலுவான ஷெல் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அது எவ்வளவு வலிமையானது? ஒரு முதலை அதன் சக்திவாய்ந்த தாடைகளைப் பயன்படுத்தி அதை உடைக்க முடியுமா? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில்களை வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாங்கள் பேசும் வீடியோவை இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரி நவீத் ட்ரம்பூ (Naveed Trumboo) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த சுவாரஸ்யமான கிளிப்பை "நீங்கள் இந்த உலகில் வாழ விரும்பினால் அடர்த்தியான தோலும் வலிமையான மனமும் அவசியம். நீங்கள் அவர்களை அனுமதிக்காவிட்டால் யாரும் உங்களை உடைக்க முடியாது" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.  

ALSO READ | Viral: பழங்களை சுத்தம் செய்ய முகமூடியை உபயோகப்படுத்திய பழ வியாபாரி!!

சுமார் 18 விநாடிகளை கொண்ட அந்த வீடியோவில், ஒரு முதலை ஒரு ஆமையை சாப்பிட முயற்சிக்கிறது. முதலை ஆமையை விழுங்க அதன் தாடைகளின் சக்தியைப் பயன்படுத்தி ஷெல்லை உடைக்க முயற்சிக்கிறது, ஆனால் ஒவ்வொரு முறையும் முதலை தோல்வியடைகிறது. இறுதியாக, அது கைவிடுகிறது மற்றும் ஆமை அதன் மரணத்திலிருந்து விலகிச் செல்கிறது.

வீடியோவில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அலிகேட்டரும் ஆமையை சாப்பிட முடியாது என்பதை உணர்ந்து விட்டுவிடுகிறது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கிளிப்பைஇதுவரை சுமார் 26.4K முறைக்கு மேல் பார்க்கப்பட்டது. இந்த வீடியோவிற்கு பயனர்கள் தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருக்கின்றனர். 

ZEE ஹிந்துஸ்தான் மொபைல் செயலியை பதிவிறக்க: 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News