ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 21, 2022, 02:04 PM IST
  • ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு
  • பல்வேறு காலி பணியிடங்கள் இருக்கின்றன
  • அக்டோபர் 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

Reserve Bank of India புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி Research Associates பணியிடங்களுக்கு தகுந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி அக்டோபர் 31 ஆகும். மேலதிக விவரம் கீழ்வருமாறு:

காலி பணியிடங்கள்:

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Associates பணிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.

RBI Research Associates பணிக்கான தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Economics / Statistics / Finance / International Finance / International Trade / MBA with specialization in finance / Banking / International Relations ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி: தீபாவளி பரிசாய் வந்த அரசின் அறிவிப்பு

RBI Research Associates முன் அனுபவம்:

பொருளாதார ஆராய்ச்சி நடத்துவதில் சுமார் இரண்டு ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

RBI Research Associate சம்பளம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் மாதம் ரூ. 1,20,000 சம்பளமாக பெறுவார்கள்.

RBI வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio data மற்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RESEARCHASSOCIATESG20DEEFF... என்ற அறிவிப்பில் இருக்கும் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அன்றைய தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Union Bank Of India வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News