LIC Recruitment: புதிய வேலைவாய்ப்பு 8581 வளர்ச்சி அதிகாரி காலி பணியிடங்கள்!!

இந்தியாவில் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் ஏ.டி.ஓ (ADO) பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 20, 2019, 05:29 PM IST
LIC Recruitment:  புதிய வேலைவாய்ப்பு 8581 வளர்ச்சி அதிகாரி காலி பணியிடங்கள்!! title=

நியூ டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி-யில் 8581 ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இதற்க்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் இந்தியாவில் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் ஏ.டி.ஓ (ADO) பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த பணிக்கு தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான தளமான licindia.in என்ற இணையதளத்தில் முழு தகவல்களும் இருக்கின்றன.

விபரம்:-
நிறுவனம்: எல்.ஐ.சி. 
காலியிடங்கள்: 8,581
வயது: 21 முதல் 30 வரை
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (முன்னுரிமை:எம்பிஏ)
பதவி: அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர் - Apprentice Development Officer (ADO)
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ 50 & மற்றவர்களுக்கு ரூ 600

எப்பொழுது & எப்படி விண்ணப்பம் செய்வது:-

> licindia.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

> ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: மே 20, 2019

> ஆன்லைன் விண்ணப்பம் செலுத்தும் கடைசி தேதி: ஜூன் 9, 2019

> விண்ணப்பம் கட்டணம் செலுத்தும் நாள்: மே 20 முதல் ஜூன் 9 வரை

> விண்ணப்பத்தை நகல் எடுத்துக்கொள்ள கடைசி தேதி: ஜூன் 26, 2019

> விண்ணப்பத்துக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கவும் செய்யும் கடைசி நாள்: ஜூன் 29, 2019 

தேர்வுக்கான நாட்கள்:-

> ஆன்லைனில் முதல் நிலைத் தேர்வு (online Prelims exam): ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை

> ஆன்லைனில் பிரதான தேர்வு (online Main exam): ஆகஸ்ட் 10 ஆம் தேதி

மண்டலம் வாரியாக காலி பணியிடங்கள்:- 

வட மண்டலம் - 1130
கிழக்கு மண்டலம் - 922
மேற்கு மண்டலம் - 1753
தெற்கு மண்டலம் - 1257
மத்திய மண்டலம் - 525
மத்திய & தென் மண்டலம் - 1251
மத்திய & வட மண்டலம் - 1042
மத்திய & கிழக்கு மண்டலம் - 701

Trending News